Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிஸ்டி வரி குறைப்பு…. கார்களின் விலையை அதிரடியாக குறைத்த வோல்க்ஸ்வேகன் – எவ்வளவு தெரியுமா?

Volkswagen India Price Slash : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்களின் விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப வோல்க்ஸ்வேகன் நிறுவன் கார்களின் விலையை குறைத்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

ஜிஸ்டி வரி குறைப்பு…. கார்களின் விலையை அதிரடியாக குறைத்த வோல்க்ஸ்வேகன் – எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2025 17:31 PM IST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் (Nirmala Sitharaman) தலைமையில் கடந்த செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்ற ஜிஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி (GST) வரியை 18 % மற்றும் 5% என இரண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன் படி பொருட்கள் இந்த இரண்டு அடுக்குகளின் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வருகிற செப்டம்பர் 22 அன்று முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விலை குறைவான கார்களின் ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கார்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் கார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கார்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது?

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார்களின் விலையை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. இந்த விலை குறைவு வருகிற செப்டம்பர் 22, 2025 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

  • விர்டஸ் (Virtus)  காரானது அதிகபட்சம் ரூ.66,900 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • டைகுன் (Tigun)  கார், அதிகபட்சம் ரூ.68,400 வரை விலை குறையும்
  • டிகுவான் ஆர்-லைன் (Tiguan R-line)  கார் அதிகபட்சம் ரூ.3, 26,900 வரை விலை குறையும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : GST : ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை.. ஜிஎஸ்டி மாற்றத்தால் அதிரடியாக குறையபோகும் விலை?

இதற்கிடையில் ஜிஎஸ்டி சலுகைகளுக்கு அப்பால், குறிப்பிட்ட சில மாடல்களுக்கு கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • டைகுனின் சில மாடல்களுக்கு ரூ.1.61 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • டிகுவான் ஆர்-லைன் கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால சலுகை

இந்தியாவில் தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை நெருங்குவதால் விலை குறைப்பு மற்றும் சிறப்பு சலுகைகள் ஆகியவை வோல்க்ஸ்வேகன் கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. தற்போது இந்தியாவில் வோல்க்ஸ்வேகன் விற்பனை செய்யும் முக்கிய மாடல்களான டைகுன், விர்டஸ், டிகுவான் ஆர்-லைன் மற்றும் கால்ஃப் முக்கியமானவை.

எந்த வாகனங்களுக்கெல்லாம் ஜிஎஸ்டி குறையவுள்ளது?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி, சிறிய கார்கள் 350 சிசிக்கு குறைவான பைக்குகள், ஆட்டோ, பேருந்துகள், லாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களின் ஜிஎஸ்டி வரி விகிதம் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : குறையும் கார்களின் விலை… கார் லோனுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் வங்கிகள் – எது சிறந்தது?

இதன் மூலம் மாருதி ஆல்டோ, ஹூண்டாய் கிராண்ட் i10, டாடா டியாகோ போன்ற பட்ஜெட் கார்கள் சுமார் 10 சதவிகிதம் வரை விலை குறையும். அதே போல ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளெணண்டர் போன்ற பைக்குளும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.