Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்’ ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசிய பிரதமர் மோடி

PM Modi On GST Reforms : சீரமமைக்கப்பட்ட ஈரடுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும், காங்கிரஸையும் கடுமையாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கூறி உள்ளார்.

’இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்’ ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Sep 2025 20:39 PM IST

டெல்லி, செப்டம்பர் 04 : ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளையும் அவர் விமர்சித்துள்ளார். சீரமமைக்கப்பட்ட ஈரடுக்கு ஜிஎஸ்டி 2025 செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலாகிறது. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் அன்றாட பொருட்களின் விலைகள் குறையக் கூடும். மேலும், 90 சதவீத பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் விருது பெற்ற ஆசிரியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து அவர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “சரியான மாற்றங்கள் இல்லாமல், இன்றைய உலகளாவிய சூழ்நிலையில் நம் நாட்டிற்கு உரிய இடத்தை நாம் வழங்க முடியாது. இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்ய அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று இந்த முறை ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் இருந்து நான் கூறினேன். இந்த தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன் இரட்டை மகிழ்ச்சி இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன். இப்போது GST இன்னும் எளிமையாகிவிட்டது. செப்டம்பர் 22 அன்று, ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலாகும்.

Also Read : ஜிஎஸ்டி குறைப்பு – எந்ததெந்த மாடல் கார்களின் விலை குறையும்? முழு விவரம்

காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களில் ஒன்று ஜிஎஸ்டி. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியைம் மேம்படுத்தும். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, ​​பல தசாப்தங்களின் கனவு நனவாகியது. காங்கிரஸ் அரசாங்கம் உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை எவ்வாறு அதிகரித்தது என்பதை யாராலும் மறக்க முடியாது.

குழந்தைகளுக்கான இனிப்புகளுக்கு அவர்கள் 21% வரி விதித்தனர். மோடி இதைச் செய்திருந்தால், அவர்கள் என் தலைமுடியைப் பிடுங்கியிருப்பார்கள். சமையலறைப் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, விவசாயப் பொருட்களாக இருந்தாலும் சரி, மருந்துகள், ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு, காங்கிரஸ் அரசாங்கம் பல்வேறு பொருட்களுக்கும் வெவ்வேறு வரிகளை விதித்தது.

Also Read : பால் முதல் புற்றுநோய் மருத்து வரை.. இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. பட்டியல் இதோ!

காங்கிரஸ் கட்சி, வீடுகள் கட்டுவதை கடினமாக்கியது. சிமெண்டிற்கு 29 சதவீத வரி விதித்தது. மேலும் நடுத்தர வர்க்கத்தினர் பயணம் செய்வதை மிகவும் கடினமாக்கியது. ரூ. 100 மதிப்புள்ள ஒன்றை வாங்கினால், நீங்கள் ரூ. 20-25 வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் எங்கள் அரசாங்கத்தின் நோக்கம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் பணத்தைச் சேமித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்என்று கூறினார்.