Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GST Reform: ஜிஎஸ்டியில் வரியில் அதிரடி மாற்றம்.. விலை குறையும் பொருட்கள்.. மக்கள் மகிழ்ச்சி!

56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. பல அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. உயர் ரக கார்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றின் மீதான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

GST Reform: ஜிஎஸ்டியில் வரியில் அதிரடி மாற்றம்.. விலை குறையும் பொருட்கள்.. மக்கள் மகிழ்ச்சி!
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 Sep 2025 09:14 AM

டெல்லி, செப்டம்பர் 4: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளது என அதிரடியாக அறிவித்தார். அதன்படி என்னென்ன பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் மாற்றம் வரும் என்ற கேள்வி மக்களுக்கும், வணிகர்களுக்கும் எழுந்தது. இப்படியான நிலையில் டெல்லியில் நேற்று அனைத்து மாநில நிதியமைச்சர்களும்  பங்கேற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. 2 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த இந்த கூட்டத்தின் முதல் நாள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றிருந்தார்.

கொண்டு வரப்பட்ட மாற்றம்

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொருட்களுக்கு 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளாக மட்டுமே வரி விதிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வரியை குறைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்துடனும் கருத்து வேறுபாடு இல்லாமல், அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். முன்னதாக 5,12,18,28 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு தற்போது இரண்டு விதமாக மட்டுமே அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

Also Read: வரலாற்றில் முதல்முறை! ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

மேலும் இழப்பீட்டு வரி தொடர்பான பிரச்சனைகளையும் நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தமானது சாதாரண மக்களை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஒவ்வொருவரையும் தீவிர மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் மூலம் சாதாரண மனிதர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டு பொருள்களில் முழுமையான வரி குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்

செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமல்

அந்த வகையில் உயர் ரக கார்கள், புகையிலை, பான் மசாலா மற்றும் சிகரெட்டுகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி முன்மொழியப்பட்டுள்ளது.குட்கா, புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் தவிர அனைத்து பொருட்களுக்கும் புதிய ஜிஎஸ்டி வரியானது நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம்சீஸ், பதப்படுத்தப்பட்ட பால், பாஸ்தா, பேக் செய்யப்பட்ட தேங்காய் தண்ணீர்,  பழச்சாறுகள், பேரீச்சம் பழங்கள், வெண்ணெய், சோயா பால் பானங்கள், கொட்டைகள் மற்றும் போன்ற பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றிற்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்படவுள்ளது.

Also Read: ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பு… கடும் சரிவை சந்திக்கும் கார் விற்பனை

மருத்துவ உபகரணங்களான ஆக்ஸிஜன், கேஸ், பேண்டேஜ்கள், நோயறிதல் கருவிகள் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.