தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி!
Sitharaman Questions Tamil Nadu's Equality | சென்னையில் இன்று (மே 2, 2025) செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் சமத்துவம் எங்கு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜிஎஸ்டி உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

சென்னை, மே 2 : சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் (DMK – Dravida Munnetra Kazhagam) வெற்றி என கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Central Finance Minister Nirmala Sitharaman) கூறியுள்ளார். சென்னையில் இன்று (மே 2, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜிஎஸ்டி (GST – Goods and Service Tax) குறித்து பேசியுள்ள அவர், தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜிஎஸ்டி என்பது மோடி போடும் வரி இல்லை – நிர்மலா சீதாராமன்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஜிஎஸ்டி என்பது மோடி போடும் வரி இல்லை எல்லா மாநில நிதி அமைச்சர்களும் அடங்கியதுதான் ஜிஎஸ்டி கவுன்சில். நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது என்ற வாதம் தவறானது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாகவே வரி இருந்தது. முன்னதாக இருந்ததை விட ஜிஎஸ்டி வந்தபின் வரி விகிதம் குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
VIDEO | Tamil Nadu: Here’s what Union Finance Minister Nirmala Sitharaman (@nsitharaman) said on DMK’s ‘state being denied central funds’ claim, while addressing a press conference in Chennai.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/d5500vCEwJ
— Press Trust of India (@PTI_News) May 2, 2025
தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது? – நிர்மலா சீதாராமன் கேள்வி
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். அது குறித்து பேசிய அவர் சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது. சமத்துவத்தை பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி எனக் கூறுவதா என கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுகவின் வெற்றி என கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று கூறியுள்ளார்.