Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GST Revenue India: வரலாற்றில் முதல்முறை! ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

April 2025 GST Collection: 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ₹2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது 2024 ஏப்ரல் மாதத்தை விட 12.6% அதிகம். இது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் இதுவரை இல்லாத உச்சம் பெற்றுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதி வரி வசூலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது. மாநிலங்களின் வரி வசூலிலும் அதிகரிப்பு காணப்பட்டது.

GST Revenue India: வரலாற்றில் முதல்முறை! ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
நிர்மலா சீதாராமன் - ஜிஎஸ்டி வசூல்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 01 May 2025 19:01 PM

டெல்லி, மே 1: 2025 ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி (GST) வசூல் 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசாங்கம் (Central Government) தெரிவித்துள்ளது. அரசாங்க தரவுகளின்படி, 2024 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 2.10 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை 01, 2017 முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். மார்ச் 2025 ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.96 லட்சம் கோடியாக இருந்தது. உள்நாட்டு பரிவத்தனைகளின் வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட ரூ. 1.9 லட்சம் கோடியாக உயர்த்துள்ளதாக ஜிஎஸ்டி தரவு காட்டுகிறது.

எவ்வளவு வசூல்..?


அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2025 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் வசூல் ஆனது கிடையாது. இதுவரையிலான அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் நடந்திருப்பதும் தற்செயல் நிகழ்வு என்று கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.46,913 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் தொகை 48.3 சதவீதம் அதிகரித்து ரூ.27,341 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சரிசெய்தலுக்குப் பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ.2.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வெளியான தரவுகள்:

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் எப்போது..?

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருக்கலாம். அப்படி இல்லையென்றால், ஜிஎஸ்டி கூட்டம் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் அந்தந்த பட்ஜெட் கூட்டத்தொடர்கள் மற்றும் சட்டமன்ற செயல்முறைகளில் மும்முரமாக உள்ளன. இதனால்தான் 56வது கவுன்சில் கூட்டத்தின் தேதியை நிர்ணயிக்கும் மையத்தின் முயற்சிகள் தாமதமாகி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும். இருப்பினும், கடந்த 4 மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை. கடைசி கூட்டம் டிசம்பரில் நடைபெற்றது.

தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!...
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!...
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!...
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!...
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ...
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!...
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்...
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...