Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி 2.0.. தமிழகத்திற்கு இத்தனை பலன்களா? வெளியான தகவல்கள்

GST Reforms : பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பால், தமிழகத்தில்  பல  நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களின் வருவாய் அதிகரிக்கக் கூடும்.

பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி 2.0.. தமிழகத்திற்கு இத்தனை பலன்களா? வெளியான தகவல்கள்
ஜிஎஸ்டி சீர்திருத்தம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Sep 2025 13:52 PM IST

சென்னை, செப்டம்பர் 23 : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்களில் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சீர்திருத்தங்களின்படி, முன்பு இருந்த நான்கு அடுக்குகள் முறை இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.  அதாவது, 5,12,18,22 என்ற அளவில் நிர்யணிக்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்டி வரம்பில் 12 மற்றும் 28 சதவீத வரிகள் நீக்கப்பட்டன. 5 மற்றும் 18 சதவீத வரிகள் மட்டும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் வரி முறையில் ஒரு வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம்

இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பை எளிமைப்படுத்தியுள்ளது.  அதாவது, இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தால் பால், தயிர், பனீர், உலர் பழங்கள், சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களுக்கு இப்போது 12% க்கு பதிலாக 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும். இந்த நடவடிக்கை மாதாந்திர வீட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும்.

Also Read : அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி மாற்றம்.. விலை குறைந்த பொருட்கள்!

இதேபோல், முன்னதாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட டிவிக்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் வாஷின் மிஷின்களுக்கு இப்போது 18% வரியின் கீழ் வரும். ஆடை மற்றும் காலணிகளும் 12% லிருந்து 5% ஆக மாற்றப்பட்டுள்ளன. இது நடுத்தர குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்க வாய்ப்பளிக்கிறது. சமையல் எண்ணெய், சோப்புகள், டூத் பேஸ்ட், முடி எண்ணெய் போன்ற அடிப்படைப் பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டது. இப்போது 5 சதவீதம் மட்டுமே விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் வணிகர்களின் சுமைமைகள் குறையும். சிறு, குறு வணிகர்கள் மிகவும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​இந்தியாவில் கலால் வரி, VAT, சேவை வரி, நுழைவு வரி போன்ற பல வரிகள் இருந்தன. மேலும் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த ஜிஎஸ்டி முறையை பின்பற்றின. இது ஊழலுக்கான வாய்ப்பை உருவாக்கியது.

தமிழகத்திற்கு இத்தனை பலன்களா?

குறிப்பாக, மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பால், தமிழகத்தில்  பல  பலன்கள் ஏற்பட உள்ளன.  அதாவது,  தமிழ்நாடு ஒரு தொழில்துறை மையமாக இருப்பதால் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தால் ஜவுளித்துறை, தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல், மீன்வளம் உள்ளிட்ட துறைகள் அதிக லாபம் பெறும் என கூறப்படுகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தால் திருப்பூர், கோவையில் உள்ள பருத்தி, நூல், துணி உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

Also Read : பால் முதல் நெய் வரை… ஜிஎஸ்டி வரி குறைப்பு – ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் மீதான வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், ஆம்பூர் மற்றும் வேலூரின் வருவாயை அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாகக் கூடும். மேலும், கருவாடுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு தொடர்கிறது. அதே மீன்பிடி உபகரணங்கள் இப்போது மலிவாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிறிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாறியுள்ளது. இதனால், சென்னை மற்றும் ஓசூர் பகுதிகளின் வருவாய் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த இரட்டை அடுக்கு ஜிஎஸ்டி, வீடுகளுக்கு குறுகிய கால சேமிப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், தேசிய அளவிலும், குறிப்பாக, தமிழ்நாட்டின் தொழில்துறை எதிர்காலத்தை மேம்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.