ஜிஎஸ்டி வரி குறைப்பு…. அதிரடியாக விலை குறையும் ரயில் நீர் – எவ்வளவு தெரியுமா?
Rail Neer : இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பயணிகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில் ரயில் நீர் வாட்டர் பாட்டிலை வழங்கி வருகிறது. தற்போது இதன் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. ரயில் டிக்கெட்களை உடனடியாக பெற, டிக்கெட் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ரயில்ஒன் (RailOne) என்ற செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரயில் டிக்கெட் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்திய ரயில்வே மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரயில் நீரை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. தற்போது ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பால் இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடியாக குறையும் ரயில் நீர் விலை
பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி வரும் செப்டம்பர் 22 , 2025 திங்கட்கிழமை முதல் ரயில் நீர் (Rail Neer) பாட்டில்களின் அதிகபட்ச விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்துள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:




இதையும் படிக்க : லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஜிஎஸ்டி நீக்கம்: உண்மையில் எவ்வளவு சேமிக்க முடியும்?
-
இதுவரை ரூ.15க்கு விற்கப்பட்ட 1 லிட்டர் ரயில் நீர் பாட்டிலின் விலை ரூ.14 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
ரூ.10க்கு விற்கப்பட்ட 500 மில்லி பாட்டிலின் விலை ரூ.9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் நீரின் விலை குறைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதம் குறைக்கப்பட்டிருப்பதன் பலனை பயணிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக ரயில் அமைச்சகம் இந்த விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
ரயில் நீர் விலை குறைப்பு குறித்து இந்தியன் ரயில்வேயின் அறிவிப்பு
GST कम किये जाने का सीधा लाभ उपभोक्ताओं को पहुंचाने के उद्देश्य से रेल नीर का अधिकतम बिक्री मूल्य 1 लीटर के लिए ₹15 से कम करके 14 रुपए और आधा लीटर के लिए ₹10 से कम करके ₹9 करने का निर्णय लिया गया है। @IRCTCofficial #NextGenGST pic.twitter.com/GcMV8NQRrm
— Ministry of Railways (@RailMinIndia) September 20, 2025
இதையும் படிக்க : பூஸ்ட், ஹார்லிக்ஸ் முதல் ப்ரூ காபி வரை… அதிரடியாக விலை குறைப்பு – எவ்வளவு தெரியுமா?
பிற பிராண்டுகளின் குடிநீர் பாட்டிலின் விலையும் குறையும்
மேலும், ஐஆர்சிடிசி மற்றும் இந்தியன் ரயில்வே தேர்ந்தெடுத்துள்ள பிற பிராண்டுகளின் குடிநீர் பாட்டில்களுக்கும் இதேபோன்ற விலை குறைப்பு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் விற்கப்படும் 1 லிட்டர் பாட்டிலின் விலை ரூ.15இல் இருந்து ரூ.14 ஆகவும், 500 மில்லி பாட்டிலின் விலை ரூ.10இல் இருந்து ரூ.9 ஆகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் செப்டம்பர் 22 2025 அன்று முதல் அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.