Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பூஸ்ட், ஹார்லிக்ஸ் முதல் ப்ரூ காபி வரை… அதிரடியாக விலை குறைப்பு – எவ்வளவு தெரியுமா?

Price Cut Alert : டவ் ஷாம்பு, கிளினிக் பிளஸ் ஷாம்பு, ப்ரூ காபி வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிரடியகா விலை குறைத்துள்ளது. விலை எவ்வளவு குறைந்துள்ளது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பூஸ்ட், ஹார்லிக்ஸ் முதல் ப்ரூ காபி வரை… அதிரடியாக விலை குறைப்பு – எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Sep 2025 15:20 PM IST

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் தனது நிறுவனங்களின் கீழ் விற்கப்படும் பொருட்களுக்கு பெரிய அளவில் விலையைக் குறைத்து அறிவித்துள்ளது. அதன் படி டவ் ஷாம்பு (Dove Shampoo), லக்ஸ் சோப்புகள், லைஃப்பாய் சோப்பு, கிளினிக் பிளஸ், சன்சில்க், ஹார்லிக்ஸ், பூஸ்ட், கிசான் ஜாம், கிசான் கெச்சப், ப்ரூ காபி பவுடன் கினார் சூப், ஹெல்மன்ஸ் மையோனிஸ், குளோஸ்அப் டூத் பேஸ்ட், லேக்மே காஸ்மெடிக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஜிஎஸ்டி (GST)வரி குறைப்பின் ஒரு பகுதியாக பொருட்களின் விலை குறைப்பு நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய விலைப்பட்டியல் செப்டம்பர் 22, 2025 அன்று முதல் அமலுக்கு வரும் என நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 18% மற்றும் 40% என மூன்று விதமான வரி பிரிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கும் விதமான விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை.. ஜிஎஸ்டி மாற்றத்தால் அதிரடியாக குறையபோகும் விலை?

சோப்பு மற்றும் ஷாம்புகளின் விலை குறைவு

  • டவ் ஷாம்பு 340 மி.லிட்டரின் விலை 490 ரூபாயில் இருந்து 435 ரூபாய் அளவுக்கு குறையும். அதாவது ரூ. 55 அளவுக்கு மக்கள் சேமிக்க முடியும்.
  • தற்போது ரூ.393க்கு விற்கப்படும் 355 மி.லிட்டர் கிளினிக் பிளஸ் ஸ்டிராங் அண்ட் லாங் ஷாம்பு ரூ.53 விலை குறைந்து ரூ.340க்கு விற்கப்படும்.
  • தற்போது சன்சில்க் பிளாக் ஷைன் ஷாம்பு 350 மிலிட்டரின் விலை ரூ.40 விலை குறைந்து ரூ. 430க்கு விற்கப்படும்.
  • 75 கிராம் டவ் சீரம் பார் ரூ.45ல் இருந்து 5 ரூபாய் குறைந்து ரூ.40க்கு விற்கப்படவுள்ளது.
  • 75 கிராம் லக்ஸ் ரேடியண்ட் குளோ சோப் ரூ.96ல் இருந்து ரூ.85 ஆக விலை குறையவுள்ளது.
  • 75 கிராம் லைஃப்பாய் சோப் 68 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக விலை குறைகிறது.

உணவு மற்றும் பானங்கள்

  • 200 கிராம் ஹார்லிக்ஸின் விலை ரூ.130ல் இருந்து ரூ.110க்கு விற்கப்படும்.
  • 400 கிராம் ஹார்லிக்ஸ் வுமன் பிளஸ் ரூ.320ல் இருந்து ரூ.284 ஆக விலை குறையவுள்ளது.
  • 200 கிராம் பூஸ்ட் ரூ.124ல் இருந்து ரூ.110 ஆக விலை குறைகிறது.
  • 200 கிராம் கிஷான் ஜாம் ரூ.90ல் இருந்து ரூ.80 ஆக விலை குறைகிறது.
  • 850 கிராம் கிஷான் கெட்சப் ரூ.100ல் இருந்து ரூ.93 ஆக விலை குறைகிறது.
  • 67 கிராம் நார் டொமேட்டோ சூப் ரூ.65ல் இருந்து ரூ.55 ஆக விலை குறைகிறது.
  • 250 கிராம் ஹெல்மென்ஸ் ரியல் மயோனிஸ் ரூ.99ல் இருந்து ரூ.90 ஆக விலை குறைகிறது.
  • 75 கிராம் ப்ரூ காபி பவுடரின் விலை ரூ.300ல் இருந்து ரூ.270 ஆக விலை குறைகிறது.

இதையும் படிக்க : ஜிஸ்டி வரி குறைப்பு…. கார்களின் விலையை அதிரடியாக குறைத்த வோல்க்ஸ்வேகன் – எவ்வளவு தெரியுமா?

பராமரிப்பு பொருட்கள்

  • 150 கிராம் கோல்கேட் டூத் பேஸ்ட்டின் விலை ரூ.145ல் இருந்து ரூ.129 ஆக குறைகிறது.
  • அதே போல 9 கிராம் லேக்மி காம்பேக்ட் பவுடர் ரூ.675ல் இருந்து ரூ.599 ஆக விலை குறைகிறது.