Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அவசர காலங்களில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியுமா? உண்மை என்ன?

Emergency Travel Rules : நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் ரயில் போக்குவரத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு இடத்துக்கு விரைவாகவும் குறைவான கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பது இதற்கு காரணம். இந்த நிலையில் அவசர நேரங்களில் நமக்கு உடனடியாக ரயில் டிக்கெட் கிடைக்காது.

அவசர காலங்களில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியுமா? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2025 20:08 PM IST

ரயில் (Train) போக்குவரத்து நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது. குறைவான கட்டணத்தில் விரைவாக செல்ல முடியும் என்பதால் மக்கள் அதிக அளவு ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.  நம் வாழ்க்கையில் எப்போது அவசர நிலை வரும் என கணிக்க முடியாது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திடீரென ஏற்டும் உடல் நலக் குறைவு, அவசர வேலை அல்லது எதிர்பாராத சூழ்நிலை காரணமாக உடனடியாக பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். அப்போது பெரும்பாலும் பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கிடைக்காது. ஆன்லைனில் உடனடியாக டிக்கெட் எடுக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன?

இந்திய ரயில்வே, பயணிகளுக்கு சிரமத்தை கருத்தில் கொண்டு சில சிறப்பு விதிகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி டிக்கெட் இல்லாமல் நேரடியாக ரயிலில் ஏறுவது சட்ட விரோதமானது. ஆனால் அவசர சூழ்நிலைகளில் பயணிகள் சில சலுகைகளை பெற முடியும். அவசர காலகட்டத்தில் டிக்கெட் எடுக்க முடியாத சூழலில், பயணிகள் பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறலாம். ஆனால் அது மட்டும் போதாது. ரயிலில் ஏறியவுடன் டிக்கெட் பறிசோதகரை சந்தித்து நம் சூழ்நிலையை விளக்க வேண்டும்.

இதையும் படிக்க : காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் ரயிலில் பயணிக்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்?

டிக்கெட் பரிசோதகர் உங்களுக்கான சரியான டிக்கெட்டை வழங்குவார். அந்த நேரத்தில் நீங்கள் முழு கட்டணத்துடன் கூடுதல் அபராதத்தையும் செலுத்த வேண்டி இருக்கும். அதன் பிறகு நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் பயணிக்கலாம்.  ஆனால் டிக்கெட் பரிசோதகர் முதலில் உங்களை டிக்கெட் இல்லாமல் பிடித்தால், உங்களை அவர் ரயிலில் இருந்து இறக்கிவிடலாம்.

ஜெனரல் டிக்கெட்டில் பயணிக்கலாம்

அவசர நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் ஜெனரல் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஜெனரல் டிக்கெட் என்பது ரயில் நிலையங்களில் எளிதாக கிடைக்கும். எல்லா ரயிலிலும் ஜெனரல் கோச் இருக்கும். UTS செயலி மூலம் கூட ஜெனரல் டிக்கெட் எடுக்க முடியும். ஜெனரல் கோச்சில் அதிக பயணிகள் பயணிப்பார்கள் என்பதால் கூட்ட நெரிசல் இருக்கும். இருப்பினும் அபராதம் இன்றி பயணிக்க முடியும். அவசர காலகட்டங்களில் இதனை தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் படிக்க : Cancel பட்டனை இரண்டு முறை அழுத்தினால் ஏடிஎம் பின்னிற்கு பாதுகாப்பா? உண்மை என்ன?

இந்த வசதி உண்மையான அவசர நிலைகளில் மட்டுமே பயணிகளுக்கு உதவியாக இருக்கும். திட்டமிட்டு டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறினால், கடுமையான அபராதமும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.  டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏற முடியாது. ஆனால் உண்மையான அவசர காலங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி உடனை டிக்கெட் பரிசோதகரை சந்தித்து டிக்கெட் பெறலாம். இதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பதை மனதில் கொள்வது அவசியம்.