Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் ரயிலில் பயணிக்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்?

Indian Railway Reservation Rules: இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு ரயிலையே அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் முன் பதிவு செய்யும் ரயில் டிக்கெட் உறுதிபடுத்தப்படவில்லை என்றால் அவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்படும். காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் ரயிலில் பயணிக்க முடியுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் ரயிலில் பயணிக்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Sep 2025 17:20 PM IST

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் மக்கள் ரயில் போக்குவரத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் எளிய மக்களுக்கு ரயில் ஒரே தேர்வாக இருந்து வருகிறது. நாம் குடும்பத்துடனோ அல்ல நண்பர்களுடனோ பயணத்தை திட்டமிடும்போது 4 அல்லது 5 பேருக்கும் சேர்த்தும் ஒரே முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வோம். ஆனால் சில நேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் உறுதிபடுத்தப்படாது. இதுபோன்ற நேரங்களில் மீதமுள்ள நபர்கள் எப்படி பயணிப்பார்கள், ரயில்வே விதி என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் பயண நாளில் தாங்கள் புக் செய்த ரயிலில் ஏறலாம். ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் தாங்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதை சொல்லி முறையிடலாம். அவர்கள் ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தால், அதனை உங்களுக்கு ஒதுக்குவார்கள். ஒருவேளை இருக்கைகள் காலியாக இல்லையென்றால் உங்களை ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சில் பயணிக்க பரிசோதகர் அனுமதிக்க மாட்டார்.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு – எந்ததெந்த மாடல் கார்களின் விலை குறையும்? முழு விவரம்

காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்க முடியாது என இந்தியன் ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது. சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு உங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மேற்சொன்ன பெட்டிகளில் ஏற முடியாது. மீறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
  • உதாரணமாக டிக்கெட் உறுதி செய்யப்பட்டவர்கள் வழக்கம்போல பயணிக்க முடியும். அதே போல காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் டிக்கெட் ஆர்ஏசி ஆக மாற்றப்பட்டலா். நீங்கள் ரயிலில் ஏறலாம். ஆனால் உங்கள் இருக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும். அதாதவ இரண்டு பேர் ஒரே பெர்த்தில் பயணிக்க வேண்டும்.
  • மேலும் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தால், ரயில் நிலையத்தில் இருந்தோ அல்லது UTS செயலி மூலமாகவோ ஒரு பொது டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் அப்படி டிக்கெட் இல்லாமல், நீங்கள் வெறும் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் உறுதிபடுத்தப்படாத டிக்கெட்டை மட்டும் வைத்திருந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இதையும் படிக்க : ரயில் டிக்கெட் முன்பதிவில் 20% தள்ளுபடி – எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் டிக்கெட்டை ஐஆர்சிடிசி என்ன செய்யும்?

நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அது உறுதிபடுத்தப்படாவிட்டால், ஐஆர்சிடிசி அந்த டிக்கெட்டை தானாகவே ரத்து செய்து உங்கள் பணத்தை திருப்பித் தரும். எனவே நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியதில்லை. ரயிலில் ஒருவரின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு இருக்கை காலியாக இருந்தால் டிக்கெட் பரிசோதகர் அந்த இருக்கையை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கலாம்.