Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மலிவான இடியாப்ப இயந்திரம்…. பலரின் தொழில் கனவை நினைவாக்கிய சேலம் இளைஞர்!

Smart Kitchen Success : தொலைநோக்கு பார்வையும், விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தொழிலில் வெற்றி பெறலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கார்த்திக் ராஜா கர்ணம். சேலத்தை சேர்ந்த இவர், மலிவு விலையில் இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி பலரின் வாழ்க்கையை மிகவும் எளிமையாக மாற்றியிருக்கிறார்.

மலிவான இடியாப்ப இயந்திரம்…. பலரின் தொழில் கனவை நினைவாக்கிய சேலம் இளைஞர்!
கார்த்திக் ராஜா கர்ணன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Aug 2025 15:37 PM

தொழில்துறையில் வெல்ல வேண்டும் என்றால், தொலைநோக்கு பார்வையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் என மீண்டும் ஒருமுறை நிருமித்திருக்கிறார் கார்த்திக் ராஜா கர்ணன். சேலம் (Salem) நகரில் சாதாரணமாக தொடங்கிய இவர் இன்று தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இவரின் கண்டுபிடிப்பு பலரது சமையல் வேலைகளை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. தற்போது மேடிக் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் கார்த்திக் ராஜா. இத்தனைக்கும் அவர் பெரிய பின்புலத்தில் இருந்து வரவில்லை. அவரிடம் இருந்தது ஒரு தொழில் ஐடியா மட்டுமே. அதனை முதலீடாக (Investment) வைத்து இன்று இளம் தொழிலதிபராக, வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். அவரது கதையை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இன்ஜினியரிங் படித்த கார்த்திக் ராஜா, ஒரு சாதாரண வேலையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. மக்களுக்கு பயன்படும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார். ஆரம்பத்தில் நிதி பற்றாக்குறை, தொழில் அனுபவம் இல்லாமை போன்றவற்றால் சவால்களை எதிர்கொள்கிறார். அவரது கனவு மைக்ரோவேவ் அளவுக்கு ஒரு சிறிய இடியாப்ப இயந்திரம் உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவு.

இதையும் படிக்க : வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய நிறுவனம்… ரூ.7 கோடி டர்ன் ஓவர்… சென்னையின் பிரபல டீ பிராண்டை உருவாக்கிய இளைஞர்

எதிர்கொண்ட சவால்கள்

ஆனால் ஆரம்பத்தில் கடும் சவால்களை சந்தித்தார். அப்போதெல்லாம் நான் நிச்சயம் ஒருநாள் என் லட்சியத்தை அடைவேன் என தொடர்ந்து உழைத்திருக்கிறார். முதலீடு கிடைக்காத நிலையில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் தொடங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரம் முயற்சியில் அவருக்கு தோல்வி கிடைக்கிறது.

சந்தையில் அதுவரை கிடைத்த இயந்திரங்கள் அதிக விலையில் விற்கப்பட்டதன் காரணமாக சாதாரண மக்களுக்கு அதனை வாங்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது. எனவே மலிவான விலையில் இடியாப்ப இயந்திரம் தயாரிக்க வேண்டும் என அவர் முடிவெடுக்கிறார்.  குறிப்பாக பெண்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்படுத்த கூடிய வகையில் இயந்திரத்தை வடிவமைக்க வேண்டும் என நினைக்கிறார்.

திருப்புமுனையாக அமைந்த தருணம்

சில வருட உழைப்பிற்கு பிறகு மைக்ரோவேவ் அளவில் ஒரு சிறிய இடியாப்ப இயந்திரத்தை அவர் உருவாக்கினார். சந்தையில் அதுவரை கிடைத்த இயந்திரங்களை விட விலை குறைவு, குறைந்த பராமரிப்பு செலவு, அதிக உற்பத்தி திறன் ஆகிய அம்சங்களால் அவரது இயந்திரம் இந்தியா முழுவதும் பிரபலமானது.

இதையும் படிக்க : வெறும் ரூ.10 மேப் தான்… தமிழகத்தில் ரூ.600 கோடி நிறுவனத்தை உருவாக்கிய மலையாளி – விகேசி நிறுவனம் ஜெயித்த கதை

தற்போது 3000க்கும் மேற்பட்ட சிறு, குறு  தொழில்முனைவோர்கள் இவரது சிறிய இடியாப்ப இயந்திரத்தினால் பலன் அடைந்திருக்கின்றனர். குறிப்பாக ஹவுஸ் ஒயிஃப்கள், சிறிய ஹோட்டல் நடத்துபவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

நிறுவனத்தின் வளர்ச்சி

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 60 சதவிகிதம் பேர் பெண்கள். பலருக்கு இந்த இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரத்தின் மூலம் ரூ.1, 500 முதல், ரூ.5000 வரை வருமானம் கிடைக்கிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனயாக பயிற்சி கொடுத்து அவர்கள் சுயதொழில் துவங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.