Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெறும் ரூ.10 மேப் தான்… தமிழகத்தில் ரூ.600 கோடி நிறுவனத்தை உருவாக்கிய மலையாளி – விகேசி நிறுவனம் ஜெயித்த கதை

Success Story : தொழில் தொடங்கும்போது சந்தை நிலவரத்தை சரியாக புரிந்துகொண்டால் எல்லோராலும் சாதிக்க முடியும் என்பை நிரூபித்திருக்கிறார் விகேசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். விகே நிறுவனம் இன்று ரூ.600 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அதன் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வெறும் ரூ.10 மேப் தான்… தமிழகத்தில் ரூ.600 கோடி நிறுவனத்தை உருவாக்கிய மலையாளி – விகேசி நிறுவனம் ஜெயித்த கதை
விகேசி நிறுவனர் நௌஷாத்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Aug 2025 16:34 PM

 தொழில் துவங்க நினைப்பவர்கள் தங்கள் நிலையில் இருந்து வெளியே வந்து புதிய வழிகளை முயற்சிக்க வேண்டும் என்கிறார் வி.நௌஷாத். தற்போது இந்தியாவில் பிரபலமாக இருக்கும் விகேசி காலணி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். கேரளாவைச் (Kerala) சேர்ந்த நௌஷாத் ஆரம்பத்தில் பல சிரமங்களையும், நிராகரிப்புகளையும் சந்தித்தார். ஆனால் அவரது விடாமுயற்சியால் இன்று ரூ.600 கோடி நிறுவனத்தின் தலைவராக வளர்ந்து நிற்கிறார். விகேசி நிறுவனம் அவரது தந்தையால் தொடங்கப்பட்ட நிறுவனம். அதனை விரிவுபடுத்த நௌஷாத் களமிறங்கினார். அவருக்கு தமிழ்நாட்டின் ரூ.10 மேப் உதவியது. அவரது வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

விகேசி நிறுவனம் தமிழ்நாட்டில் காலடி பதித்த கதை

விகேசி நிறுவனம் முதலில் நௌஷாத் அவர்களின் தந்தையால் கேரளாவில் தொடங்கப்பட்டது. பின்னர் அதை விரிவுபடுத்தும் பொறுப்பை நௌஷாத் ஏற்றார். தமிழ்நாடு மிகப்பெரிய சந்தை என்பதை உணர்ந்து கொண்ட நௌஷாத் அங்கு விகேசி நிறுவனத்தை தொடங்க நினைக்கிறார். இதற்கா தமிழ்நாட்டில் உள்ள டிஸ்டிரிபியூட்டர்களை அணுகினர். ஆனால் அவர்கள் கொடுத்த கூடுதல் மார்ஜின், விலையில் தள்ளுபடி ஆகியவை நௌஷாத்தால் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆரம்பமே தடங்கலாக இருந்தது.

இதையும் படிக்க : 1,00,000 அறுவை சிகிச்சைகள்… குறைந்த கட்டணம்… அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரின் சாதனைகள்

10 ரூபாய் மேப்பின் உதவியால் வென்ற நௌஷாத்

இந்த நிலையில் தான் ஒரு முக்கிய முடிவெடுக்கிறார். கடையில் ரூ.10 கொடுத்து தமிழ்நாட்டின் வரைபடத்தை வாங்குகிறார். தமிழகத்தில் உள்ள பெருநகரங்கள், நகரங்கள், தாலுகாக்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்கிறார். பின்னர் தங்கள் குழுவினருடன் ஒவ்வொரு நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கும் நேரடியாக சென்று தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்.  கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பயணம் விரைவிலேயே அவருக்கு பலனளித்தது.  தமிழகத்தில் வெகு விரைவிலேயே மிக முக்கிய நிறுவனமாக விகேசி வளர்ந்தது.

இதையும் படிக்க :  வறுமையினால் 13 வயதில் படிப்பை கைவிட்ட சிறுவன்…. இன்று ரூ.1000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஜிஆர்பி பிராண்ட் ஜெயித்த கதை

வெற்றிக்கான காரணம்

இது தொடர்பாக பேசிய நௌஷாத், எங்களால் முடியும் என்றால், எல்லோராலும் முடியும். பிரச்னை என்னவென்றால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களாக புரிந்து கொண்டு விற்பனையைத் தொடங்குவதால் பிரச்னைகளை சந்திக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தையை புரிந்துகொள்ள நேரம் செலவிடுவத்தில்லை. நாம் யாருக்கு பொருட்களை விற்கிறோம். அவர்களின் தேவை என்ன ? என்பதில் யாரும் அக்கறைகாட்டுவதில்லை. ஒவ்வொரு நிறுவனமும் ஏஜெண்ட்கள் மற்றும் டிஸ்டிபியூட்டர்களையும் மட்டுமே நம்பிகின்றன. இது பெரி தவறு. முதலில் நாம் களத்தில் இறங்கி, மக்களின் தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும். தரமான தயாரிப்புகளை குறைந்த விலையில் வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்திறார்.