1,00,000 அறுவை சிகிச்சைகள்… குறைந்த கட்டணம்… அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரின் சாதனைகள்
Aravind Eye Hospital : குறைந்த செலவில் தரமான சேவைகளை வழங்கி வருகிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. இதன் நிறுவனர் வி.கண்ணப்பா சென்னையில் பிறந்தவர். மதுரை பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் அவர் மதுரையில் தனது மருத்துவமனையை துவங்கினார்.

அரவிந்த் கண் மருத்துவமனை குறைந்த செலவில் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக எளிய மக்கள் இந்த கண் மருத்துவமனையின் மூலம் மிகவும் பிரபலமடைந்தனர். இந்த நிறுவனத்தை துவங்கியவர் டாக்டர் கோவிந்தப்பா வெங்கடசாமி. பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் குழந்தையாக இருக்கும்போது வளர்ந்ததும் டாக்டராகவோ அல்லது கலெக்டராகவோ மாறி பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என சொல்லியிருப்போம். ஆனால் அதனை தன் வாழ்க்கையில் கடைபிடித்தவர் கண்ணப்பா. ஆரம்பத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது அரவிந்த் கண் மருத்துவமனையை மதுரையில் துவங்கினார்.
அரவிந்த் மருத்துவமனையின் நிறுவனர் கோவிந்தப்பா வெங்கடசாமி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பிறந்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்ற அவர், 1945 ஆம் ஆண்டு முதல் 1948 வரை இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார். கடந்த 1976 ஆம் ஆண்டு மதுரையில் அரவிந்த் கண் மருத்துமனையை துவங்கினார். கோவிந்தப்பா வெங்கடசாமி இதுவரை 1,00.00 அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையை பொதுச்சேவைக்காக அர்ப்பணித்தவர்.
மதுரையில் துவங்க காரணம்?
டாக்டர்.கோவிந்தப்பா வெங்கடசாமி நினைத்திருந்தால் சென்னையில் மருத்துவமனை துவங்கி அதிகம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் அங்கு கண் மருத்துவர்கள் அதிகம். எனவே மதுரையில் துவங்கி சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறார். காரணம் எளிய மக்கள் நிறைந்த மதுரையில் கண் மருத்துவத்துக்கு அதிகம் செலவு செய்ய முடியாது என புரிந்துகொள்கிறார். தன்னுடைய சேவை, அங்கு தான் அதிகம் தேவை என புரிந்துகொள்கிறார். இதனையடுத்து கடந்த 1976 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது அரவிந்த் கண் மருத்துவமனை. ஆரம்பத்தில் மதுரை மக்களுக்கு இலவசமாகவே சேவையை வழங்கினார்.




இதையும் படிக்க : இனி நடிகர் இல்ல…. பிஸ்னஸ்மேன்… சத்தமில்லாமல் தொழில் தொடங்கிய ‘பசங்க’ ஸ்ரீராம்
அரவிந்த் கண் மருத்துவனையின் வளர்ச்சி
அரவிந்த் கண் மருத்துவமனை இன்று உலகின் மிகப்பெரிய கண் மருத்துவமனை நெட்வொர்க்காக உருவாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் வருடத்திற்கு மில்லியன் கணக்கான நோயாளிகள் மருத்துவ சேவைகளை பெறுகின்றனர். இது உலக அளவில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகளை வழங்கி வரும் மாடலாக அறியப்படுகிறது. குறிப்பாக அறுவைக சிகிச்சைகள் மிக மிக குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். கண் அறுவை சிகிச்சைகள் மட்டுமல்லாது அதற்கு பின் நடைபெறும் பரிசோதனைகளும் குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது. ஆனால் தரத்தில் குறைவில்லாததால் மக்களின் பேராதரவை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது.
இதையும் படிக்க : எளிய நகரத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்…. இன்று 25 நாடுகளில் விற்பனை…. இதயம் நிறுவனர் வென்ற கதை
அரவிந்த் கண் மருத்துவமனை இன்று 45 கிளினிக்குகள், ஆய்வுக்கூடங்கள் பயிற்சி கூடங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மதுரை மட்டுமல்லாது, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.
முக்கிய சாதனைகள்:
கண் அறுவை சிகிச்சை குறைந்த செலவில் செய்யப்படுகிறது. அரவிந்த் கண் மருத்துவமனையானது கண் மருத்துவ ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ஹில்டன் விருது கோவிந்தப்பா வெங்கடசாமிக்கு வழங்கப்பட்டது. சிறப்பான சேவையை பாராட்டி உலகின் 100 சிறந்த மனிதர்களின் ஒருவராக டைம்ஸ் இதழால் மருத்துவர் கோவிந்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைக் காட்டிலும் உயர்வாக மத்திய அரசு இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.