Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி நடிகர் இல்ல…. பிஸ்னஸ்மேன்… சத்தமில்லாமல் தொழில் தொடங்கிய ‘பசங்க’ ஸ்ரீராம்

Pasanga Sreeram : கமல்ஹாசன், விஜய், சிலம்பரசன் என குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த நிலையில் பசங்க படத்தில் ஜீவா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் கவனம் ஈரத்த ஸ்ரீராம், தற்போது ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார்.

இனி நடிகர் இல்ல…. பிஸ்னஸ்மேன்… சத்தமில்லாமல் தொழில் தொடங்கிய ‘பசங்க’ ஸ்ரீராம்
பசங்க ஸ்ரீராம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2025 15:25 PM

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக சினிமாவில் ஹீரோவாக ஜெயித்தவர்கள் பலர். கமல்ஹாசன் (Kamal Haasan) தொடங்கி, விஜய், சிலம்பரசன் என அந்த பட்டியல் மிக நீளம். ஒருமுறை புகழ் வெளிச்சம் பட்டுவிட்டால் அதில் இருந்து வெளியே வருவது மிகவும் கடினம். அப்படி ஜெயித்தவர்கள் குறைவு தான். அப்படி குழந்தை நட்சத்திரங்கள், வளர்ந்ததும் ஹீரோவாக வளர்ந்து தோற்ற கதைகள் ஏராளம். நாம் வேண்டாம் என நினைத்தாலும் நம்மை சுற்றியுள்ள கூட்டம் அதனை ஏற்காது. அந்த வகையில் பசங்க படத்தில் ஜீவா என்ற வேடத்தில் கலக்கியவர் தான் ஸ்ரீராம். மற்றவர்களைப் போல வளர்ந்ததும் ஹீரோவாக களமிறங்க முயற்சிக்காமல் தொழில்முனைவோராக மாறி, தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து பார்க்கலாம்.

ராம் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தில் குடடி பிரபாகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீராம். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனையடுத்து அவருக்கு கிடைத்தது தான் பசங்க ஜீவா கதாப்பாத்திரம். ஒரு சில கதாப்பாத்திரங்கள், சில நடிகர்கள் நடித்த பிறகு அவர்களுக்காகவே எழுதப்பட்டதாக தோன்றும். அப்படி ஸ்ரீராமுக்காகவே படைக்கப்பட்டதோ தோன்றுவது தான் பசங்க ஜீவா கதாப்பாத்திரம். அதன் பின்னர் கோலி சோடா போன்ற சில படங்களில் நடித்தவர் தற்போது சினிமாவில் இருந்து முற்றிலும் தொழில்முனைவோராக மாறியிருக்கிறார்.

இதையும் படிக்க : வறுமையினால் 13 வயதில் படிப்பை கைவிட்ட சிறுவன்…. இன்று ரூ.1000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஜிஆர்பி பிராண்ட் ஜெயித்த கதை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஸ்ரீராம்

தற்போது கார்பன் வெளியீடு அதிகரித்ததன் காரணமாக புவி வெப்பமயமாவது அதிகரித்திருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பூமியை பாதுகாக்கும் நோக்கில் ஆற்றல் என்ற நிறுவத்தை நடத்தி வருகிறார். தற்போது உள்ள எரிசக்திகளுக்கு மாற்றாக பூமியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிவுகளாக வீசப்படும் பொருட்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதன் மூலம் வருகிற 2050 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் கார்பன் வெளியீட்டை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிக்க : இந்தியாவின் வோல்டேஜ் சிக்கல் – தொழில் வாய்ப்பாக மாற்றிய இளைஞர் – வி- கார்டு நிறுவனம் ஜெயித்த கதை!

அவரது நிறுவனம் தற்போது பாசியை அடிப்பைடையாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் கழிவுநீர் மேலாண்மை குறித்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. வெறும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்காமல், தன்னால் இயன்ற அளவுக்கு இந்த பூமியை மேம்படுத்த முயற்சிக்கும் ஸ்ரீராமுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.