மூங்கில் இலையில் துணிகள்… ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்
From Struggle to Success: ராஜபாளையத்தை சேர்ந்த இளைஞர் விஜயராகவன் திரூப்பூரில் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கி, ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மூங்கில் இலையில் துணி உருவாக்கி மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் திருப்பூர் (Tiruppur) நாட்டின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி துறையின் மையமாக விளங்குகிறது. ஜவுளி மற்றும் அது சார்ந்த தொழில்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு திருப்பூர் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இந்த நிலையில் வெறும் டிப்ளமோ பட்டதாரியான ஒருவர் ரூ.5 லட்சம் முதலீட்டில் நிறுவனத்தை துவங்கி, ரூ.200 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்திருக்கிறார். மூங்கில் இலையில் இருந்து ஒரு தனித்துவமான உள்ளாடை பிராண்டை உருவாக்கி பெரும் சாதனை படைத்திருக்கிறார். இது அவரது தொழிலுக்கு தனித்துவமான அடையாளத்தை அளித்தது. அவரது வெற்றிக்கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களைக் கவர்ந்த தனித்துவமான வடிவமைப்பு
கடந்த 1995 ஆம் ஆண்டு விஜயராகவன் தனது 21வது வயதில் தொழிலில் அடியெடுத்து வைத்தார். ராஜாபாளையத்தில் பிறந்த அவர், தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற உந்துதால், பிவிகே எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை துவங்கினார். அன்றைய காலகட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்து திரூப்பூரில் பருத்தி நூலை துணியாக நெய்து, டிசர்ட் மற்றும் டிராக் பேண்ட்களை தயாரிக்க தொடங்கினார். அவரது தனித்துவமான வடிவமைப்பு ஏற்றுமதி சந்தையில் தனி இடத்தை பிடித்தன. அவர் தொழிலில் படிப்படியாக வளர தொடங்கியது.
இதையும் படிக்க : மலிவான இடியாப்ப இயந்திரம்…. பலரின் தொழில் கனவை நினைவாக்கிய சேலம் இளைஞர்!




பெரிய பிராண்டுகளின் நம்பிக்கையை பெற்ற விஜயராகவன்
விஜயராகவனின் நிறுவனம் தொடர்ந்து வளர்ந்தது. அவர் மாதம் 3000 துணிகளில் இருந்து 4 லட்சம் துணிகளாக வளர்ந்தது. குறிப்பாக பெரிய பிராண்டுகளின் நம்பிக்கையை பெற்றார். குறிப்பாக வான் ஹியூசன், பூமான், ரேமண்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளுக்கு ஆடைகளை தயாரித்து வழங்கினார். தற்போது அவரது நிறுவனத்தில் 1600க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். விஜய ராகவன் தரம் மற்றும் புதுமையில் கவனம் செலுத்தினார். இதனால் அவரது நிறுவனம் ஒரு சிறப்பு அடையாளத்தை உருவாக்கியது.
மூங்கில் இலையில் தயாரிக்கப்படும் துணிகள்
பெரிய பிராண்டுகளுக்கு துணிகளை தயாரித்து தருவது போக, தானே லாவோஸ் என்ற சொந்த பிராண்டை அறிமுகப்படுத்துகிறார். இந்த பிராண்ட்டின் மிக சிறப்பு என்னவென்றால் அவை மூங்கில் இலையில் இருந்து துணிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பருத்தியை விட மென்மையானவை மட்டுமல்ல, உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும், உடல் ஈரத்தை விரைவில் உறிஞ்சுவதும் மட்டுமல்லாமல் துர்நாற்றத்தை தடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தொழிலில் தோல்வி, பறிபோன வீடு… நம்பிக்கையுடன் ரூ.12 கோடி வருமானம் தரும் நிறுவனத்தை உருவாக்கிய ரகுநாதன்
லாவோஸ் தயாரிப்புகள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களில் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் குறைந்தது 11500க்கும் மேற்பட்ட துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. . விஜயராகவனின் தொழிற்சாலை முற்றிலும் சூரிய மற்றும் காற்றாலை மூலம் பெறப்படும் மின் சக்தியில் இயங்குகிறது. மேலும் அதிகப்படியாக கிடைக்கும் மின்சாரத்தை, மாநில மின்சாரத்திற்கு விற்கிறார்.