வாட்ஸ்அப் காலை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி கவலை இல்லை – வெளியான புது அப்டேட்
WhatsApp Update Alert: வாட்ஸ்அப் அனைவரும் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத செயலியாக மாறியிருக்கிறது. குறிப்பாக உறவுகளை வளர்க்க, அலுவலக பணிகளை மேற்கொள்ள என நம் அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸஅப் அழைப்புகளை சில நேரம் தவறவிடும் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாட்ஸ்அப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வாட்ஸ்அப் (WhatsApp) மக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது. அது வெறும் சோஷியல் மீடியா (Social Media) என்பதைத் தாண்டி, வேலை சார்ந்து அனைத்து தகவல்களும் வாட்ஸ்அப்பில் தான் பகிரப்படுகின்றன. இதனால் நாம் மற்ற சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுப்பது போல வாட்ஸ் அப்பில் இருந்து பிரேக் எடுக்க முடியாது. சமயங்களில் நாம் பிஸியாக இருக்கும்போது வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை திரும்ப அழைக்க மறந்துவிடுவோம். அவை அலுவலகத்தில் இருந்து வரும் முக்கிய அழைப்புகளாக இருந்தால் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும். இனி அது குறித்த பதற்றமடைய தேவையில்லை. இந்த பிரச்னையை சரி செய்ய, வாட்ஸ்அப் இரண்டு புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. தவறவிட்ட அழைப்புகளை நினைவூட்டும் விதமாக புதிய அம்சத்தை அறிமுகப்புத்தியிருக்கிறது.
வாட்ஸ்அப் அழைப்பை நினைவுபடுத்தும் அம்சம்
சில நேரங்களில் பிஸியாக இருப்பதால் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியாது. பின்னர் நாங்கள் திரும்ப அழைக்க மறந்து விடுகிறோம். இதுபோன்ற சிக்கலைச் தவிர்க்க, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவருகிறது. வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.25.22.5 இல் சோதித்து வருகிறது. இதில், மிஸ்டு கால்களுக்கான நினைவூட்டல்களை வழங்கும் ஆப்சன் உங்களுக்கு இருக்கும். நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப 2 மணிநேரம், 8 மணிநேரம், 24 மணிநேரம் என ஒரு நினைவூட்டலை அமைத்து, மறக்காமல் அழைப்பிற்கு பதிலளிக்கலாம்.
இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்




பல முறை நாம் ஒரு அழைப்பைத் தவறவிட்டு, பின்னர் யாருக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். இது முக்கியமான அழைப்பாக இருந்தால் நமக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம். யாரை திரும்ப அழைக்க வேண்டும் என்பதை வாட்ஸ்அப் தானாகவே உங்களுக்கு நினைவூட்டும்.
இதையும் படிக்க : UPI : ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் Cashback.. ஆண்டுக்கு ரூ.7,500.. பெறுவது எப்படி?
வாட்ஸ்அப் புரொஃபைல் அப்டேட்
வாட்ஸ்அப் மற்றொரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோவை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் வாட்ஸ்அப்பில் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் டிபியை வைக்க விரும்பினால், புகைப்படத்தை கேலரியில் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் புகைப்படத்தை நேரடியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து தேர்ந்தெடுத்து வாட்ஸ்அப் புரொஃபைல் போட்டோவை அப்டேட் செய்யலாம். இது நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் செயல்முறையை எளிதாக்கும். இந்த இரண்டு அம்சங்களும் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. அவை விரைவில் அனைத்து பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.