Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போன் பே, கூகுள் பே-க்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்.. யுபிஐ சேவையை தொடங்க திட்டம்!

BSNL UPI Service | இந்தியாவில் ஏற்கனவே கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம், பிஎஸ்என்எல் பே சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

போன் பே, கூகுள் பே-க்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்.. யுபிஐ சேவையை தொடங்க திட்டம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2025 11:30 AM

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவையை பயன்படுத்துகின்றனர். இதற்காக இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) உள்ளிட்ட செயலிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு யுபிஐ செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது  யுபிஐ செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனம் யுபிஐ செயலியை அறிமுகம் செய்தால் அது கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளுக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

யுபிஐ சேவையை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்?

பிஎஸ்என்எல் தனது யுபிஐ சேவையை அறிமுகம் செய்வது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், 2025 தீபாவளி பண்டிகையின் போது பிஎஸ்என்எல் தனது யுபிஐ சேவையை அறிமுகம் செய்யலாம் என தரவுகள் கூறுகின்றன. யுபிஐ சேவைக்காக பிஎஸ்என்எல் கூகுள் பே, போன்பே போன்ற தனி செயலிகளை அறிமுகம் செய்யப்போவதில்லை என்றும், பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் (BSNL Selfcare) செயலியில் யுபிஐ சேவையை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் – டிக்கெட் புக் செய்யும் முறையில் புதிய மாற்றம்

பிஎஸ்என்பே சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த பிஎஸ்என்எல்பே (BSNL Pay) மூலம்  கூகுள் பே, போன்பே செயலிகளில் மேற்கொள்வதை போல அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளையும் பயனர்கள் மேற்கொள்ள முடியும். ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் நிலையில், அதனுடன் இணைந்து தடையற்ற யுபிஐ பண பரிவர்த்தனை சேவையை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : முதல் முறை கடன் வாங்குபவர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை.. சூப்பர் தகவலை சொன்ன மத்திய அரசு!

தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் பிஎஸ்என்எல்

அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ உள்ளிட்டவை தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தி வரும் நிலையில், பலரும் தங்களது சிம் கார்டுகளை பிஎஸ்என்எல்-க்கு மாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிஎஸ்என்எல் யுபிஐ சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது மேலும் பயனர்களை தன்வசம் இழுக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.