ஏடிஎம் பண பரிவர்த்தனை.. கூடுதல் கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?.. ஆர்பிஐ கூறும் முக்கிய விதிகள்!
RBI ATM Transaction Limits | ஏடிஎம் பண பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கிய விதிகளை ஆர்பிஐ நடைமுறையில் வைத்துள்ளது. இந்த நிலையில், ஏடிஎம் பண பரிவர்த்தனைகள் லிமிட், அதற்கான கட்டணம் ஆகியவை குறித்து ஆர்பிஐ விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் நிதி மற்றும் பண பரிவர்த்தனைகள் சார்ந்த நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) பண பரிவர்த்தனை தொடர்பான சில விதிகளை ஆர்பிஐ (RBI – Reserve Bank of India) வெளியிட்டுள்ளது. எச்டிஎஃசி, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகள் தங்களது ஏடிஎம் பண பரிவர்த்தனை விதிகள் மற்றும் கட்டணத்தில் ஏற்கனவே மாற்றம் செய்துள்ள நிலையில், ஆர்பிஐ தனது விதிகளில் மாற்றம் செய்யாமல் உள்ளது. இந்த நிலையில், ஏடிஎம் பண பரிவர்த்தனை தொடர்பாக ஆர்பிஐ கடைபிடிக்கும் முக்கிய விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனை லிமிட்
மெட்ரோ சிட்டிகளில் ஒரு மாதத்திற்கு மூன்று இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனைகளுக்கும், மெட்ரோ அல்லாத பகுதிகளுக்கு ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. சில வங்கிகள் இந்த விதிகளில் மற்றம் செய்துள்ள நிலையில், ஆர்பிஐ இதே விதிகளை பின்தொடர்கிறது.
பணம் செலுத்துவது, பணம் எடுப்பதற்கான லிமிட்
ஆர்பிஐ-ன் இந்த இலவச பண பரிவர்த்தனை அளவு பண பரிவர்த்தனைகள் மற்றும் இதற சேவைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக வங்கி கணக்கு இறுப்பு சோதனை செய்வது, பின் மாற்றம் செய்வது ஆகிவை அடங்கும். ஏடிஎம் மெஷின்களில் பணம் டெபாசிட் செய்வதறுகு இலவசம் தான். ஆனால், பண பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணம் ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப மாறுபடும்.
இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரியில் வரும் மாற்றம் – எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?
ஒரு மாதத்துக்கான லிமிட்டை மீறினால் என்ன ஆகும்?
ஒரு மாதத்திற்கான லிமிட்டை நீங்கள் மீறிவிட்டால் வங்கிகள் அதற்கு ரூ. 23 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கும். உதாரணமாக பிஎன்பி வங்கி பண பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கிறது. இதுவே பண பரிவர்த்தனைகள் அல்லாத சேவைகளுக்கு ரூ.11 கட்டணம் வசூலிக்கிறது.
ஒரு ஆண்டுக்கான பண பரிவர்த்தனை அளவு என்ன?
இந்தியாவில் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி ஒரு ஆண்டில் எவ்வளவு பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்ற வரையறை உள்ளது. அதாவது ஒரு ஆண்டில் ஒருவர் ரூ.20 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் பான் மற்றும் ஆதார் கார்டை சமர்ப்பிக்க வேண்டும். கருப்பு பணத்தை முடக்குவதற்காகவும், வங்கி பரிவர்த்தனைகளை வெளிப்படையானதாகவும் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
இதையும் படிங்க : கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கடன் வாங்குவதில் சிக்கலா? இந்த எளிய வழிகளை டிரை பண்ணுங்க!
கூடுதல் கட்டணத்தை தவிர்ப்பது எப்படி?
கூடுதல் கட்டணத்தை தவிர்க்க உங்களது வங்கியின் ஏடிஎம் மையங்களை பயன்படுத்துங்கள். கையில் பணம் தேவையில்லை என்றால் வங்கிகளின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துங்கள். உங்கள் ஏடிஎம் பயன்பாட்டை முறையாக கண்காணித்து பண பரிவர்த்தனை மேற்கொள்வது தேவையற்ற கட்டணத்தை தவிர்க்க உதவி செய்யும்.