குழந்தைகளுக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா? முழுமையான வழிகாட்டி இதோ!
Smart Banking Options for Children : பெற்றோர்கள் குழந்தைகளுக்காக அவர்களது சிறுவயதில் இருந்தே முதலீடு செய்யத் துவங்கியிருக்கிறார்கள். இது அவர்களது எதிர்காலத்தில் நிதி தேவைக்கு பெரிதும் உதவும். சில வங்கிகள் குழந்தைகள் சேமிப்பு கணக்கை துவங்க அனுமதிக்கின்றன. அதற்கான வயது வரம்பு, விதிமுறைகள் உள்ளட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெற்றோர்கள் (Parents) தங்களது குழந்தைகளுக்காக சிறுவயதில் இருந்தே முதலீடு (Investment) செய்ய துவங்கியிருக்கிறார்கள். மேலும் சிறு வயதில் இருந்தே அவர்கள் பெயரில் கணக்கு துவங்கி குறிப்பிட்ட தொகையை சேமித்து வருகிறார்கள். இது அவர்களது கல்வி போன்ற செலவுகளுக்கு பெரிதும் கைகொடுப்பதாக இருக்கும். இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள், குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கை (Bank Account) துவங்கும் வாய்ப்பை வழங்குகின்றன. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைக்கான வங்கிக் கணக்கை (Bank Account) எப்படி திறப்பது? தேவையான ஆவணங்கள் என்ன? யாருக்கெல்லாம் இது பொருந்தும்? என்ற அனைத்து தகவல்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வங்கி கணக்கு துவங்க வயது வரம்பு என்ன?
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகளுக்கான வங்கி கணக்கை துவங்கலாம். இது இரு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
Joint Account
இதில் 10 வயதுக்குட்பட்டவர்கள், பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் இணைந்து கணக்கை துவங்கலாம். இந்த கணக்கை பெற்றோர் மட்டுமே நிர்வகிக்க முடியும்.
Independent Minor Account
இதில் 10 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தனியாகவே கணக்கை நடத்த முடியும். ஆனால் அது பெற்றோர் மேற்பார்வையில் செயல்படும். ஏடிஎம் பயன்பாடு, ஆன்லைன் பேங்கிங், சொந்தமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்படும்.
இதையும் படிங்க:இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியுமா? எப்படி செய்வது?
தேவையான ஆவணங்கள்
- குழந்தைகள் துவங்க அவர்களது பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்.
- பெற்றோர் அல்லது பாதுகவாலர் மேற்பார்வையில் துவங்கும் கணக்கிற்கு பெற்றோரின் ஆதார் கார்டு, புகைப்படம், ஆகியவற்றை அளித்து கணக்கு துவங்கலாம்.
எப்படி வங்கிக் கணக்கைத் திறப்பது?
-
விருப்பமான வங்கியின் அருகிலுள்ள கிளைக்குச் செல்லவும்.
-
கணக்கு திறக்கும் படிவத்தை நிரப்பவும்.
-
தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்
-
ATM, Net Banking போன்ற வசதிகளைத் தேர்வு செய்யவும்
-
10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கையொப்பம் தேவைப்படும்
-
2–5 வேலை நாட்களுக்குள் கணக்கு செயல்படுகிறது.
இதையும் படிங்க: CIBIL Score: சம்பளம் அதிகரித்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்குமா? உண்மை என்ன?
குழந்தைகளுக்கான கணக்கு துவங்க வாய்ப்பு வழங்கும் வங்கிகள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
-
குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
-
RuPay ATM கார்டு வழங்கப்படும்
-
மொபைல் பேங்கிங் வசதி
-
Pehla Kadam – பெற்றோர்/காவலர் இணை கணக்காக செயல்படுகிறது
-
Pehli Udaan – 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கானது.
எச்டிஎஃப்சி பேங்க்
-
இலவச கல்வி காப்பீட்டு பாதுகாப்பு
-
ATM கார்டு வழங்கப்படும்
-
பெற்றோர் கணக்கு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி
-
குழந்தைகளின் பெயரில் Recurring Deposit தொடங்கும் வசதி
ஐசிஐசிஐ வங்கி
-
பெற்றோர் கட்டுப்பாட்டில் கணக்கு செயல்படும்
-
ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் பணம் எடுத்தல் வசதி
-
பெற்றோர் எஸ்எம்எஸ் அலர்ட் மூலம் கணக்கு கண்காணிக்கலாம்
ஆக்சிஸ் வங்கி
-
குழந்தைக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்
-
ஏடிஎம் கார்டு மற்றும் ரிவார்டு பாயிண்ட் வசதி
-
பெற்றோர் கணக்குடன் இணைத்து பண பரிவர்த்தனை செய்யும் வசதி
-
திட்டமிட்ட சேமிப்பு வசதி
பஞ்சாப் நேஷனல் வங்கி
- தனியாக பாஸ்புக் வழங்கப்படும்.
- மொபைல் அலர்ட் வசதி
- பெற்றோர் கணக்குடன் இணைத்து கண்காணிக்கும் வசதி.
- குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
-
ஏடிஎம் கார்டு வழங்கப்படும்.
-
இணைய மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகள்
-
பெற்றோர் கட்டுப்பாட்டில் செலவுகளை நிர்வகிக்க இயலும்
-
வட்டி தரும் சேமிப்பு வகை