Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவில் முதல் UPI ATM மற்றும் Credit Card அறிமுகம்.. Slice நிறுவனம் அசத்தல்!

India's First UPI Bank Branch and ATM | இந்தியாவில் முதல் முறையாக யுபிஐ வங்கி கிளையும், ஏடிஎம் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த அம்சத்தை ஸ்லைஸ் நிறுவனம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் முதல் UPI ATM மற்றும் Credit Card அறிமுகம்.. Slice நிறுவனம் அசத்தல்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2025 12:14 PM

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை யுபிஐ செயலிகள் மூலமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக யுபிஐ வங்கி கிளையும், ஏடிஎம் (ATM – Automated Teller Machine) வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான நிதி நிறுவனமாக ஸ்லைஸ் (Slice) வாடிக்கையாளர்களுக்கு எளிமையான சேவைகளை வழங்கும் வகையில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் யுபிஐ சேவை

டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா, மிக வேகமாக முன்னேறி செல்லும் நிலையில், இந்தியாவில் பரவலாக யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை யுபிஐ செயலியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக வங்கி கிளையும், ஏடிஎம் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த அம்சத்தை ஸ்லைஸ் நிறுவனம் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள கோரமங்கலம் பகுதியில் அறிமுகம் செய்துள்ளது.

யுபிஐ வங்கி கிளை மற்றும் ஏடிஎம் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த புதிய யுபிஐ ஏடிஎம் கார்டு சாதாரண யுபிஐ பண பரிமாற்றங்களை போலவே இயல்பாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் கிரெடிட் வசதியை அனுபவிக்க ஆவணங்கள், மறைமுக கட்டணங்கள் போன்ற எந்தவித சிக்கல்களும் இன்றி யுபிஐ பேமெண்டை போலவே பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் கியூஆர் கோடுகளை (QR Code – Quick Response Code) ஸ்கேன் செய்தோ அல்லது யுபிஐ மூலமோ நேரடியாகவோ பணம் செலுத்தலாம். இவ்வாறு ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பயன்படுத்தப்படும் தொகை கிரெடிட் கார்டில் இருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த அம்சத்தை பயன்படுத்த வேறு எந்த வங்கியின் செயலியும் தேவையில்லை.

இந்த புதிய அம்சத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதன் மூலம் ஓவ்வொரு முறை மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கும் 3 சதவீதம் வரை கேஷ்பேக் (Cashback) கிடைக்கும். மேலும், ஸ்லைஸின் 3 எனும் புதிய அம்சம் மூலம் செலவுகளை 3 கட்ட வட்டியில்லா தவணைகளாக திருப்பி செலுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.