தெலுங்கு மொழியில் பேசி அசத்திய முதல்வர் விஜய்.. விஜயவாடா உற்சவத்தில் நதிகள் இணைப்பு குறித்து முக்கியப் பேச்சு..
CM Vijay Speech: தமிழக முதல்வர் விஜய் தெலுங்கு மொழியில் தனது உரையைத் தொடங்கி, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். விஜயவாடா மக்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், நவராத்திரி விழாவில் பங்கேற்பது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறினார். நதிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகவே விஜயவாடா வந்ததாகவும் விஜய் தெரிவித்தார்.
அக்டோபர் 13, 2026: ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தமிழக முதல்வர் விஜய் ஜோசப்பும் விஜயவாடா உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை இரு முதல்வர்களும் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் விஜய் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மாநிலங்கள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்று தான் – முதல்வர் சந்திரபாபு நாயுடு:
கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் முதல்வராகியுள்ளதாகக் குறிப்பிட்டார். மாநிலங்கள் வேறுபட்டாலும், தங்களின் நோக்கம் ஒன்றுதான் என்றார். வறட்சிக்கு நிரந்தரத் தீர்வு காண நதிகளை இணைப்பதே சிறந்த வழி என்று தெரிவித்த சந்திரபாபு நாயுடு, அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், பிரதமர் மோடியால் மட்டுமே நதிகள் இணைப்புத் திட்டத்தைச் சாத்தியமாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு! பின்னணி என்ன!
தெலுங்கு மொழியில் பேசிய முதல்வர் விஜய்:
Talk English infront of PM
Talk Telugu infront of Andhra CMAura of TN Chief Minister Vijay 🥶🔥 https://t.co/5j3ODMYhfp
— Ayyappan (@Ayyappan_1504) October 13, 2026
இதையடுத்து, தமிழக முதல்வர் விஜய் தெலுங்கு மொழியில் தனது உரையைத் தொடங்கி, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். விஜயவாடா மக்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், நவராத்திரி விழாவில் பங்கேற்பது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறினார். நதிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகவே விஜயவாடா வந்ததாகவும் விஜய் தெரிவித்தார்.
மேலும் படிக்க: எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!
கனகதுர்கை அம்மனைத் தரிசித்த முதல்வர் விஜய்
முன்னதாக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் விஜயைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அங்கு திரண்டிருந்த ரசிகர்களுக்கு விஜய் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, தனது விஜயவாடா பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று விஜய் சாமி தரிசனம் செய்தார். கோயிலின் கொடிமரத்தில் வணங்கிய பின்னர், கருவறை மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் பங்கேற்றார். இதையடுத்து, வேத பண்டிதர்கள் அவருக்கு ஆசி வழங்கி, தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.