Tamil Nadu News Live: தமிழ்நாட்டில் தொடரும் கனமழை.. தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Tamil Nadu Latest News Live Updates in Tamil : தமிழ்நாட்டில் இரண்டுநாட்களாக இன்ஸ்டா பிரபலம் ஹரிஸின் தற்கொலை பேசுபொருளாகியுள்ளது. அது தொடர்பான வழக்கில் யூடியூபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஸின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வானிலையை பொறுத்தவரை, தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது
LIVE NEWS & UPDATES
-
Jio IPO : ஜியோ பங்குகள் லேட்டஸ்ட்
100 நிமிடங்களில் ஜியோ பங்குகள் புக் ஆகின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் 2 சதவீதம் உயர்ந்துள்ளது
-
Nagai Crime News : 137 கிலோ மெத்தம்பெட்டமைன்
நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
Covai News : பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம்
கோவையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி-பிங்க் வண்ணத்தில் ஜொலித்த செம்மொழிப் பூங்கா,பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம்
-
Trichy News : மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
திருச்சி சமூக வலைதளங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங் களைக் காட்சிப்படுத்தி, அச்சுறுத்தல் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
-
Singer Krishnaraj : பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்
சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார். கிருஷ்ணராஜ் உடல் நலக் குறைவு காரணமாக காலமான செய்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 75
-
Instagram Influencer Harish : ஹரிஸ் தற்கொலையில் ஒருவர் கைது
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது
-
Weatherman Update: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Tamil Nadu Rains : தமிழ்நாடுக்கு ஆரஞ்சு அலெர்ட்
அக்டோபர் 22ஆம் தேதியான இன்று, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அக்டோபர் 22ம் தேதியான இன்று நாம் தெரிந்துகொள்ளவேண்டிய உடனடி செய்திகளை இங்கே பார்க்கலாம். இன்றைய நாளை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அக்டோபர் 22ஆம் தேதியான இன்று, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் அரசியலை பொறுத்தவரை, மத்திய அமைச்சரும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தக் காலியிடத்திற்கான தேர்தலைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 26-ல் தொடங்கி நவம்பர் 12-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. விளையாட்டை பொறுத்தவரை இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்றை நடைபெறுகிறது. மேலும் செய்திகளை உடனுக்குடன் இங்கே பார்க்கலாம்
Published On - Oct 22,2026 12:24 PM