ரீல்ஸ் பதிவில் மூழ்கிய பெற்றோர்.. கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.. அதிர்ச்சி காட்சி வைரல்!
Child Swept Away By Sea Waves : சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காட்சியில் கடலில் பெற்றோ தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த நிலையில், பெண் குழந்தை கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது பதிவாகி உள்ளது.
சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் கடற்கரையில் ஒரு தம்பதி தனது பெண் குழந்தையுடன் கடல் அலையில் நடந்தவாறு வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். குழந்தையை பிடித்திருந்த தாய் திடீரென குழந்தையின் கையை விட்ட நிலையில், அப்போது அடித்த பலத்த அலையில் அந்த குழந்தை கடல் நீரில் அடித்து செல்லப்படுகிறது. இதனை, கவனிக்காமலும், கண்டு கொள்ளாமலும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதில் கணவன், மனைவி ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த ஒருவர் விரைந்து சென்று கடல் அலையில் சிக்கிய அந்த பெண் குழந்தையை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைகிறார்.
சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் கடும் கொந்தளிப்புடன் வைரல் ஆகி வருகிறது. இத்துடன், இது பெற்றோர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. கடல் அலைகளுக்கு அருகில் தங்கள் சிறு வயது குழந்தை ஆபத்திலிருந்து போது அவர்களால் எப்படி ரூல்ஸ் வீடியோ பதிவு செய்வதில் கவனம் செலுத்த முடிந்தது என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். சம்பவம் நடந்த சரியான இடம் மற்றும் தேதி, அதில் பதிவாகியுள்ள தம்பதியின் அடையாளங்கள் ஆகியவை உறுதிப்படுத்தப்படவில்லை.




மேலும் படிக்க: எதிர்காலத்தில் இந்தியாவிற்கு என்னென்ன திறன்கள் தேவைப்படும்? AI யுகம் குறித்த அப்டேட்!
ரீல்ஸ் பதிவு செய்வதில் மூழ்கிய பெற்றோர்
அந்த வீடியோவில் குழந்தையின் தந்தை செல்ஃபி ஸ்டிக் மூலமாக தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கிறார். அப்போது, கடல் அலை அந்த குழந்தையை நோக்கி நகரும்போது, அலைகளால் அந்த குழந்தை இழுத்துச் செல்லப்படும் அபாயத்தில் இருப்பது போல தெரிகிறது. இதை கவனிக்காத பெற்றோர் தங்கள் காணொளியை பதிவு செய்வதில் கவனம் செலுத்தி உள்ளனர். அருகில் நின்ற ஒருவர் அந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டு அந்த பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்.
आज Husband के साथ समुन्द्र पर घूमने गई थी जहाँ हमने देखा एक पति पत्नी Reel बनाने में इतने मगन थे अपनी बच्ची को पानी में ही छोड़ दिया।
बच्ची समुन्द्र की लहरों में बहने से बच गई एक भय्या ने ध्यान दिया और बचा लिया।
क्या अब Reel बाजी लोगों के लिए इतनी जरूरी हो गई है अपने बच्चों… Real news
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) October 19, 2026
பெற்றோரின் செயலுக்கு வலுக்கும் கண்டனங்கள்
அந்த குழந்தை மீட்கப்பட்ட பிறகும் அந்த தம்பதி தங்களது ரீல்ஸ் பதிவில் தொடர்ந்து கவனம் செலுத்தியதாக சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன. இதில் அந்த குழந்தை எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் கடும் எதிர்வினைகளை எதிர்கொண்டது. குழந்தையின் பாதுகாப்பில் ஒரு என் கவனம் செலுத்தவில்லை என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க: இந்தியாவின் சுகாதார நிலைமை மாறி வருகிறதா? அல்லது புதிய பிரச்சனைகள் உருவாகின்றனவா?