வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் அத்துமீறல்.. தூத்துக்குடி தனிப்பிரிவு ஏட்டு மீது 3 பிரிவுகளில் வழக்கு.. விசாரணை இல்லை என குற்றச்சாட்டு!
Thoothukudi Case Registered Against Police : தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் மீது பெண்கள் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்த நிலையில் முறையாக விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தனிப்படை பிரிவின் ஏட்டு ஒருவர் அத்துமீறிய சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் முறையாக விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் நிலையத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருபவர் செல்வின் ராஜா ( 37 வயது). இவர், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை கண்காணித்து வருகிறார். இது தொடர்பாக, அந்த நபரின் வீட்டுக்கு சென்று எட்டு செல்வின் ராஜா வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதை தொடர்ந்து, மீண்டும் அந்த நபரின் வீட்டுக்கு சென்ற ஏட்டு செல்வின் ராஜா வீட்டில் தனியாக அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த ஒரு பெண் கூச்சலிட்டவாறு வெளியில் தப்பித்து ஓடினார்.
காவலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்து வீட்டின் உள்ளே இருந்த ஏட்டு செல்வின் ராஜாவை பிடித்து எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பெண் தருவை குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் பெண் வன்கொடுமை, வீட்டுக்குள் அத்திமீறி நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டு செல்வின் ராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: அரசு பணி வாங்கி தருவதாக வாக்குறுதி.. நம்பியவர்களிடம் ரூ.13.50 லட்சம்- 13 பவுன் நகை மோசடி.. ராமநாதபுரத்தில் தம்பதி அதிரடி கைது!




கைது செய்யாமல் விடுவிக்கப்பட்ட ஏட்டு
இந்த விசாரணை முடிந்து அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல் விடுவித்து விட்டதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தரப்பினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவலர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டு அவரை கைது செய்யாமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர். அத்துடன், அந்த நபர் போலீஸ் என்பதால் செல்வின் ராஜிடம் பெயரளவுக்கு மட்டுமே விசாரணை நடத்தி விட்டு அவர் மீது தொடர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பரபரப்பு
இந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், விரைவில் வந்த காவலர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு வேலியாக இருக்க வேண்டிய காவலரே அத்து மீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அரசு அலுவலக வங்கி கணக்கில் கை வைத்த ஹேக்கர்ஸ்.. ரூ. 11 லஞ்சம் கொள்ளை.. நாகை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!