AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு… பிப்ரவரி 16 முதல் தேர்வுகள் தொடக்கம்!

CBSE 10th, 12th Exam: கடந்த ஆண்டு 2026ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு உத்தேச அட்டவணை 2025 செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதி அட்டவணை அக்டோபர் 30ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதியே இறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு… பிப்ரவரி 16 முதல் தேர்வுகள் தொடக்கம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Nov 2026 07:15 AM IST

நவம்பர் 7, 2026: மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE), 2027ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் 2027 பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்குகின்றன. அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டுக்கான தேர்வு அட்டவணை நவம்பர் 6ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் தொடங்குவதற்கு 101 நாட்களுக்கு முன்பாகவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் முன்கூட்டியே தங்களது தேர்வுக்கான தயாரிப்புகளைத் திட்டமிட முடியும்.

வெளியான பொதுத்தேர்வு அட்டவணை:

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 26.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 19.8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் பதிவு செய்துள்ளனர். 10ஆம் வகுப்பில் 83 பாடங்களுக்கும், 12ஆம் வகுப்பில் 121 பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

மேலும் படிக்க: அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட குட்டி யானை – உயிரைக் காக்க முன்வந்த ‘வன்தாரா’ மையம்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை 2027

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி ஓவியம் (Painting) பாடத்துடன் தொடங்குகின்றன. முக்கியப் பாடங்களுக்கான தேர்வு தேதிகள்:

  • பிப்ரவரி 16 – ஓவியம்
  • பிப்ரவரி 17 – கணிதம்
  • பிப்ரவரி 18 – ஆட்டோமோட்டிவ், நிதிச் சந்தைகள் அறிமுகம், அழகுக் கலை மற்றும் நல்வாழ்வு, உணவு உற்பத்தி, டேட்டா சயின்ஸ்
  • பிப்ரவரி 19 – இல்ல அறிவியல்
  • பிப்ரவரி 20 – வணிகக் கூறுகள், உருது
  • பிப்ரவரி 22 – அறிவியல்
  • பிப்ரவரி 23 – சுற்றுலாத் துறை அறிமுகம்
  • பிப்ரவரி 24 – கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • பிப்ரவரி 26 – ஆங்கிலம்
  • பிப்ரவரி 27 – மலையாளம், ஒடியா, அசாமி, கன்னடம், நேபாளி உள்ளிட்ட பிராந்திய மொழிகள்
  • மார்ச் 1 – அரபு, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப் பாடங்கள்
  • மார்ச் 3 – இந்தி
  • மார்ச் 4 – உருது, பஞ்சாபி, வங்காளம், தமிழ், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகள்
  • மார்ச் 5 – தெலுங்கு, ரஷ்யன், பாரசீகம், இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை
  • மார்ச் 6 – பிரெஞ்சு
  • மார்ச் 8 – சமூக அறிவியல் (Social Science)
  • மார்ச் 9 – ஜெர்மன், என்.சி.சி., ஸ்பானிஷ், ஜப்பானிய மொழி மற்றும் கணக்குப் பதிவியல்

இதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை 2027

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி இயற்பியல் பாடத்துடன் தொடங்குகின்றன. அறிவியல், வணிகவியல் மற்றும் கலைப் பிரிவு மாணவர்களுக்கான முக்கியத் தேர்வு தேதிகள்:

பிப்ரவரி மாதத் தேர்வுகள்:

  • பிப்ரவரி 16 – இயற்பியல்
  • பிப்ரவரி 17 – பொறியியல் வரைபடம், பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி உள்ளிட்ட நடனப் பாடங்கள், தோட்டக்கலை, செலவுக் கணக்கியல்
  • பிப்ரவரி 18 – உடற்கல்வி
  • பிப்ரவரி 19 – உயிரித் தொழில்நுட்பம், தொழில்முனைவோர் கல்வி
  • பிப்ரவரி 20 – மின் தொழில்நுட்பம், மாஸ் மீடியா படிப்புகள், வடிவமைப்பு சிந்தனை மற்றும் புத்தாக்கம்
  • பிப்ரவரி 22 – என்.சி.சி., ஆட்டோமோட்டிவ், ஃபேஷன் ஸ்டடீஸ்
  • பிப்ரவரி 23 – கணக்குப் பதிவியல்
  • பிப்ரவரி 24 – ஓவியம், கிராபிக்ஸ், சிற்பக்கலை
  • பிப்ரவரி 25 – புவியியல்
  • பிப்ரவரி 26 – அலுவலக நடைமுறைகள், நூலக அறிவியல், குழந்தைப் பருவக் கல்வி
  • பிப்ரவரி 27 – வேதியியல்

மார்ச் மாதத் தேர்வுகள்:

  • மார்ச் 1 – உருது, சமஸ்கிருதம், கர்நாடக இசை, காப்பீடு உள்ளிட்ட பாடங்கள்
  • மார்ச் 2 – உளவியல்
  • மார்ச் 3 – பஞ்சாபி, வங்காளம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிப் பாடங்கள்
  • மார்ச் 4 – யோகா, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர்
  • மார்ச் 5 – ஆங்கிலம்
  • மார்ச் 6 – உணவு உற்பத்தி, வடிவமைப்பு
  • மார்ச் 8 – சுற்றுலாத் துறை
  • மார்ச் 9 – கணிதம் மற்றும் பயன்பாட்டுக் கணிதம்
  • மார்ச் 11 – இல்ல அறிவியல்
  • மார்ச் 12 – டைப்போகிராபி மற்றும் கணினி பயன்பாடுகள்
  • மார்ச் 13 – இந்தி
  • மார்ச் 15 – இந்துஸ்தானி இசை
  • மார்ச் 16 – பொருளாதாரம்
  • மார்ச் 17 – உடல் செயல்பாட்டு பயிற்சியாளர்
  • மார்ச் 18 – சந்தைப்படுத்தல்
  • மார்ச் 19 – அரசியல் அறிவியல்
  • மார்ச் 20 – செயற்கை நுண்ணறிவு
  • மார்ச் 22 – இந்தியாவின் பாரம்பரிய அறிவு மற்றும் நடைமுறைகள், வங்கி, மின்னணு தொழில்நுட்பம்
  • மார்ச் 24 – கதக் நடனம்
  • மார்ச் 25 – உயிரியல்
  • மார்ச் 27 – வரலாறு
  • மார்ச் 29 – நிதிச் சந்தை மேலாண்மை, வேளாண்மை, மருத்துவக் கண்டறிதல் உள்ளிட்ட பாடங்கள்
  • மார்ச் 30 – சமூகவியல்
  • மார்ச் 31 – இன்ஃபர்மேட்டிக்ஸ் பிராக்டீஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்

ஏப்ரல் மாதத் தேர்வுகள்:

  • ஏப்ரல் 1 – வணிகவியல், வணிக நிர்வாகம்
  • ஏப்ரல் 6 – சமஸ்கிருதம், வரிவிதிப்பு
  • ஏப்ரல் 7 – மல்டி மீடியா, டெக்ஸ்டைல் டிசைன், டேட்டா சயின்ஸ்
  • ஏப்ரல் 8 – சட்டப் படிப்புகள்
  • ஏப்ரல் 9 – சில்லறை வணிகம், வெப் அப்ளிகேஷன்

இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 9ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

ஏன் இந்த முறை தேர்வு அட்டவணை தாமதமாக வெளியானது?

கடந்த ஆண்டு 2026ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு உத்தேச அட்டவணை 2025 செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதி அட்டவணை அக்டோபர் 30ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதியே இறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவில் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்த மெட்ரோ ரயில் சேவை..- பிரதமர் மோடி பெருமிதம்!

பள்ளிகள் மாணவர்களின் தேர்வுப் பாட விவரங்களை உள்ளடக்கிய List of Candidates (LOC) பட்டியலைச் சமர்ப்பித்த பிறகே இறுதி அட்டவணை தயாரிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

 

Follow Us