AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடிடியில் வெளியாகி உள்ள வாழ 2 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Vaazha II: Biopic of a Billion Bros Movie OTT Reivew: மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற வாழ 2 படம் தற்போது ஓடிடியில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஓடிடியில் வெளியாகி உள்ள வாழ 2 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
வாழ 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2026 20:41 PM IST

மலையாள சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக மலையாள சினிமா ரசிகர்களைப் போல தமிழ் சினிமா ரசிகர்களும் மலையாளப் படங்களை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாழ. இந்தப் படம் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக மலையாள சினிமாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வாழ 2. இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாக உலக அளவில் சுமார் ரூபாய் 200 கோடிகள் வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக் வி, ஏஞ்சல் மரியா, வேதா சங்கர், தேவராஜ் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

வாழ 2 படத்தின் கதை என்ன?

ஹாஷிர் மற்றும் ஆலன் இருவரும் குழந்தையில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். இதில் ஹாஷிர் தந்தை சிறு வயதிலேயே உயிரிழந்து விடுகிறார். அப்போ ஹாஷிரின் அம்மா நிறைமாத கர்ப்பினியாக இருக்கிறார். அதே நேரத்தில் ஆலன் அம்மாவும் கர்ப்பமாக இருக்கிறார். ஹாஷிர் மற்றும் ஆலன் இருவருக்குமே தம்பி பிறக்க வேண்டு என்று ஆசை. அப்படி தம்பி பிறந்தால் தான் தங்களுடன் விளையாடுவார்கள் என்பதற்காக.

இதில் ஆலனின் அம்மாவிற்கு முதலில் குழந்தை பிறக்கிறது ஆனால் அது பெண் குழந்தை. அதனைத் தொடர்ந்து ஹாஷிரின் அம்மாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இவர்கள் தங்களின் தம்பி தங்கை இருவரையும் சொந்த அவர் அவர் தம்பி தங்கையாகவே பார்க்கிறார்கள்.

Also Read… சந்தானத்தின் லவ் பைட் படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு

இப்படி இருக்கும் சூழலில் பதின் பருவத்தில் வாழும் இளைஞர்களை போலவே எந்தப் பொருப்பும் இல்லமால் சுற்றித்திரியும் போது வாழ்க்கை பல பாடங்களை கற்றுத்தருகிறது. அந்த வாழ்க்கை ஓட்டத்தில் உடன் பிறந்தவர்களின் மீது வைத்துள்ள பாசம் எவ்வளவு என்பதையும் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… எத்தணை சிறப்பான ஒரு நடவடிக்கை இது… முதலமைச்சர் விஜயின் செயலைப் பாராட்டிய நடிகர் விஷால்!

Follow Us