AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஸ்லோ ஓவர் ரேட் சர்ச்சை.. அம்பயருக்கு அபராதம் விதிக்க பரிந்துரைத்த எம்சிசி!

Slow Over Rate: ஐசிசி சர்வதேச போட்டிகள் உள்பட கிரிக்கெட் விதிகளை நிர்வகிக்கும் அமைப்பான எம்.சி.சி-க்கு ஐபிஎல்லில் சிலவற்றிற்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் குறிப்பிட்ட நேரத்தை கடந்து நீண்டு செல்வதை எம்.சி.சி கவனித்துள்ளது. அதிலும், ஒரு சில போட்டிகள் 4 மணி நேரம் 22 நிமிடங்கள் வரை நீடித்திருப்பது, எம்.சி.சி-யின் கிரிக்கெட் தலைவர் ஃபிரேசர் ஸ்டீவர்ட்டின் கடும் எதிர்வினைக்கு வழிவகுத்துள்ளது.

IPL 2026: ஸ்லோ ஓவர் ரேட் சர்ச்சை.. அம்பயருக்கு அபராதம் விதிக்க பரிந்துரைத்த எம்சிசி!
ஐபிஎல் நடுவர்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 15 Apr 2026 18:28 PM IST

ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. 20க்கும் மேற்பட்ட போட்டிகளை கடந்து புள்ளிகள் பட்டியலில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக உள்ளது. இந்தநிலையில், ஐசிசி (ICC) சர்வதேச போட்டிகள் உள்பட கிரிக்கெட் விதிகளை நிர்வகிக்கும் அமைப்பான எம்.சி.சி-க்கு ஐபிஎல்லில் சிலவற்றிற்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் குறிப்பிட்ட நேரத்தை கடந்து நீண்டு செல்வதை எம்.சி.சி கவனித்துள்ளது. அதிலும், ஒரு சில போட்டிகள் 4 மணி நேரம் 22 நிமிடங்கள் வரை நீடித்திருப்பது, எம்.சி.சி-யின் கிரிக்கெட் தலைவர் ஃபிரேசர் ஸ்டீவர்ட்டின் கடும் எதிர்வினைக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக, போட்டிகளில் ஸ்லோ ஓவர் ரேட் செய்யும் கேப்டன்களுக்கு மட்டுமல்லாமல் அம்பயர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

ALSO READ: சிஎஸ்கே போட்டியில் விதி மீறல்.. ரஹானே மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை!

ஐபிஎல் போட்டிகள் தாமதமானது குறித்து எம்.சி.சி தலைவர் கூறியது என்ன..?

மும்பை கிரிக்கெட் சங்கக் கூட்டத்தில் பேசிய எம்.சி.சி தலைவர், “அம்பயர்கள் ஆட்டத்தை மெதுவாக்குகிறார்கள். ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது நடுவரின் வேலை என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு இடைவேளையிலும் விளம்பரங்கள் வரும்போதும், லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும்போதும், இது ஏன் நடக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வது முக்கியம். போதுமான விதிகள் இருந்தும், நடுவர்கள் அவற்றை கடுமையாக அமல்படுத்துவதில்லை, அதனால்தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியும் தாமதமாகிறது. ஐபிஎல் 2026 சமீபத்திய போட்டி ஒன்றின் இரண்டாவது இன்னிங்ஸில் 6-7 ஓவர்களைப் பார்த்துவிட்டு, ஸ்டேடியத்தை விட்டு ஹோட்டலுக்குக் கிளம்பினேன். ஆச்சரியப்படும் விதமாக, தனது ஹோட்டல் அறையில் தொலைக்காட்சியை ஆன் செய்தபோது, ​​இன்னும் 5 ஓவர்கள் மீதமிருந்தது. இதையடுத்து, ஒரு போட்டி தாமதமானால் நடுவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் ” என தெரிவித்தார்.

ALSO READ: காலில் கட்டுடன் தீவிர பயிற்சி.. ஆர்சிபிக்காக களம் காணும் கிங் கோலி..?

இதுவரை ரூ.84 லட்சம் அபராதம்:

ஐபிஎல் 2026 சீசனில் பந்துவீசும் அணி ஸ்லோ ஓவர் ரேட் விதியை மீறும்போது அந்த அணியின் கேப்டனுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. அதே அணி 2வது முறையாக அதே தவறை செய்தால் அணியின் வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். அதன்படி இதுவரை, ஸ்லோ ஓவர் ரேட் விதி மீறலுக்காக ஐபிஎல் 2026 சீசனில் 5 அணியின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, அஜிங்க்யா ரஹானே, சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த 5 அணியின் கேப்டன்களிடம் இருந்து ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மொத்தம் ரூ. 84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Follow Us