AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: காலில் கட்டுடன் தீவிர பயிற்சி.. ஆர்சிபிக்காக களம் காணும் கிங் கோலி..?

Virat Kohli Injury: கணுக்கால் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான பீல்டிங்கின்போது விராட் கோலி களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விராட் கோலி லக்னோவுக்கு எதிராக விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், விராட் கோலி அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு சக வீரர்களுடன் உரையாடுவதும் காண முடிந்தது.

IPL 2026: காலில் கட்டுடன் தீவிர பயிற்சி.. ஆர்சிபிக்காக களம் காணும் கிங் கோலி..?
ரிஷப் பண்டுடன் விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Apr 2026 16:00 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 15ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில், ஆர்சிபியின் ஆடும் லெவனில் விராட் கோலி இடம்பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி (Virat Kohli) பேட்டிங் செய்தாலும், பீல்டிங் செய்யாமல் ஓய்வு எடுத்தார். இதன் காரணமாக இன்றையை லக்னோ எதிரான போட்டியில் ஆர்சிபியின் ஆடும் லெவனில் விராட் கோலி இடம்பெறுவாரா என்பது குறித்த மர்மத்தை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை அடைய வாய்ப்புள்ளது.

ALSO READ: கால்வலியுடன் அரைசதம்.. ஆட்டமிழந்ததும் பறந்த ஹெல்மெட்.. கோலி கோபத்திற்கு காரணம் என்ன?

விராட் கோலிக்கு என்ன ஆனது..?

கணுக்கால் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான பீல்டிங்கின்போது விராட் கோலி களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விராட் கோலி லக்னோவுக்கு எதிராக விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், விராட் கோலி அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு சக வீரர்களுடன் உரையாடுவதும் காண முடிந்தது. இருப்பினும், ஒரு வீடியோவில், பயிற்சியின் போது விராட் கோலி இடது முழங்காலில் இருந்த கட்டு ரசிகர்களுக்குத் தெரியவந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில், விராட் கோலி தனது இடது முழங்காலில் கட்டுடன் நடந்து செல்வது காணப்பட்டது. அப்போது, ​​தற்போது லக்னோ அணியின் துணை ஊழியர்களுடன் இணைந்துள்ள கேன் வில்லியம்சனை அவர் சந்தித்து உரையாடினார். மேலும், கேப்டன் ரிஷப் பண்டை கட்டிப்பிடித்துப் பேசினார்.

ALSO READ: ரோஹித்துக்கு குணமடையாத காயம்.. மும்பை அணியின் தொடக்க வீரர் யார்..?

காலில் கட்டுடன் விராட் கோலி:


காலில் கட்டுப் போடப்பட்டிருந்த போதிலும், விராட் கோலி நெட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டதுடன், நீண்ட நேரம் பேட்டிங் செய்தும் தனது உடற்தகுதியை வெளிப்படுத்தினார். ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலியின் ஆட்டம் மிகவும் முக்கியமானது. கோலி தற்போது அபாரமான ஃபார்மில் இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 19 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் உள்பட 179 ரன்கள் எடுத்துள்ளார்.

Follow Us