AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கால்வலியுடன் அரைசதம்.. ஆட்டமிழந்ததும் பறந்த ஹெல்மெட்.. கோலி கோபத்திற்கு காரணம் என்ன?

Virat Kohli Angry Video: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தபோது விராட் கோலி களத்தில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், ஓய்வெடுப்பதே சிறந்தது என முடிவு செய்தார். போட்டிக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பதிதார் அவரது காயம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்தார்.

IPL 2026: கால்வலியுடன் அரைசதம்.. ஆட்டமிழந்ததும் பறந்த ஹெல்மெட்.. கோலி கோபத்திற்கு காரணம் என்ன?
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 13 Apr 2026 15:36 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, நேற்று அதாவது 2026 ஏப்ரல் 12ம் தேதி வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 50 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அவர் ஆட்டமிழந்த உடனேயே, தனது நிதானத்தை இழந்து மிகவும் கோபமாகக் காணப்பட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி (Virat Kohli) கோபத்தை கண்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. விராட் கோலி தனது விக்கெட்டை இழந்த பிறகு, கடும் கோபத்துடன் டக்அவுட்டை நோக்கி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த கோலி, முதலில் தனது க்ளவுஸை கழற்றி தூக்கி வீசி எறிந்துவிட்டு, பின்னர் தனது ஹெல்மெட்டை தரையில் எறிந்தார்.

ALSO READ: தோனியை தொடர்ந்து கோலி.. விரட்டும் காயம்.. களை இழக்குதா ஐபிஎல்?

விராட் கோலி நிதானத்தை இழந்த காட்சி:

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தபோது விராட் கோலி களத்தில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், ஓய்வெடுப்பதே சிறந்தது என முடிவு செய்தார். போட்டிக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பதிதார் அவரது காயம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்தார். அதில், “விராட் தனது கணுக்காலில் ஏற்பட்ட சிறு வலியால் அவதிப்படுகிறார்.அதனால்தான் அவர் களமிறங்கவில்லை. அவர் முழுத் தகுதியுடன் இல்லாதபோதும், பேட்டிங்கில் பங்களிக்க விரும்பிய ஒரு போராளி. எங்கள் மருத்துவக் குழு அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் அவர் வரவிருக்கும் போட்டிகளுக்குத் தயாராகிவிடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

போட்டியில் நடந்தது என்ன..?

முதலில் பேட்டிங் செய்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பில் சால்ட் 36 பந்துகளில் 78 ரன்களும், விராட் கோலி 38 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதார் 20 பந்துகளில் 53 ரன்கள் அடித்ததன் மூலம், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.

ALSO READ: தொடர் தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் தடுமாறும் மும்பை.. சென்னைக்கு எந்த இடம்?

பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 31 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். ஆனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, புள்ளி அட்டவணையில் (4 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 6 புள்ளிகள்) 3வது இடத்தைப் பிடித்தது.

Follow Us