AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sanju Samson: அழுகை ஒன்னும் வேண்டாம்.. காணாமல் கதறி அழுத சிறுவன்.. சாம்சன் கொடுத்த சர்பரைஸ்!

Sanju Samson Video Call: சஞ்சுவைப் பார்க்கும் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைக்கவில்லை என்று அந்தச் சிறுவன் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சஞ்சு சாம்சன் உன்னை நிச்சயம் பார்க்க வருவார் என்று கூறி பலர் அவரை ஆறுதல்படுத்த முயன்றனர்.

Sanju Samson: அழுகை ஒன்னும் வேண்டாம்.. காணாமல் கதறி அழுத சிறுவன்.. சாம்சன் கொடுத்த சர்பரைஸ்!
சஞ்சு சாம்சன்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 12 Apr 2026 18:28 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய சஞ்சு சாம்சனின் சதம் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று அதாவது 2026 ஏப்ரல் 11ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது சஞ்சு சாம்சனின் (Sanju Samson) 115 ரன்கள் உதவியால் 212 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய டெல்லி அணி 189 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு வந்தபோது சஞ்சு சாம்சனை நேரில் பார்க்க முடியாததால் கண்ணீர் விட்ட ஒரு சிறு ரசிகருக்காக, அந்த சஞ்சு சாம்சன் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சஞ்சு சில நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு வந்தடைந்தார். மலபார் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சஞ்சு சில குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. ஆனால், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் , சஞ்சுவை இங்கு பார்க்க முடியாததால் கண்ணீர் விட்டு அழுதார்.

சஞ்சு சாம்சன் செய்த செயல்:

 

View this post on Instagram

 

A post shared by Medhamayuri🦋 (@medhamayurii)


சஞ்சுவைப் பார்க்கும் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைக்கவில்லை என்று அந்தச் சிறுவன் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சஞ்சு சாம்சன் உன்னை நிச்சயம் பார்க்க வருவார் என்று கூறி பலர் அவரை ஆறுதல்படுத்த முயன்றனர். இறுதியாக, சஞ்சுவின் நண்பர் ராகுல் ராகவன் ‘டீம் சாம்சன்’ மூலமாக இந்த வீடியோவை பதிவிட, இந்த விஷயம் சஞ்சுவுக்கு இது தெரியவந்தது. பின்னர் சஞ்சு, அந்த குட்டி ரசிகருக்கு வீடியோ அழைப்பு மூலம் அழைத்தார்.

சஞ்சு தன்னை வீடியோ அழைப்பில் அழைத்ததை நம்ப முடியவில்லை என்பதே அந்த குழந்தையின் முதல் எதிர்வினையாக இருந்தது. சஞ்சு அவனிடம், பள்ளிக்குச் சென்றாயா அல்லது விடுமுறையில் இருக்கிறாயா என்று திருப்பிக் கேட்டார். இதை தொடர்ந்து சஞ்சு சாம்சன் அந்த சிறுவனிடம் அடுத்த முறை வரும்போது வந்து பார்ப்பதாக உறுதியளித்தார்.

ALSO READ: அம்பயருடன் வாக்குவாதம்.. நோட்டமிட்ட ஐசிசி.. ராணாவுக்கு அபாராதம்!

அந்தச் சிறுவன் அவரை ‘சார்’ என்று அழைத்தபோது, ​​அந்த நடிகர் தன்னை அப்படி அழைக்கக் கூடாது என்றும், ‘சஞ்சு’ என்று மட்டும் சொல்ல வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து சஞ்சு புன்னகைத்து, தனது ரசிகச் சிறுவனிடம் தேவையில்லாமல் அழ வேண்டாம் என்றும், அடுத்த முறை நாம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடலாம் என்றும் கூறினார். இதைக் கேட்டதும், அந்த ரசிகச் சிறுவன் மீண்டும் அழுதான். முன்னதாக, சஞ்சுவைப் பார்க்க முடியாத சோகத்தில் அவன் அழுதிருந்தால், இந்த முறை அது ஆனந்தக் கண்ணீர் வடித்தது சஞ்சு சாம்சன் மரியாதையை கூட்டியது.

 

Follow Us