AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே போட்டியில் விதி மீறல்.. ரஹானே மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை!

Ajinkya Rahane Fined: சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 22வது போட்டியின்போது, ​​கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட்டை பராமரித்ததால், அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ஐபிஎல் ஊடக வெளியீடு ஒன்று தெரிவித்துள்ளது.

IPL 2026: சிஎஸ்கே போட்டியில் விதி மீறல்.. ரஹானே மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை!
அஜிங்க்யா ரஹானே
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Apr 2026 14:44 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 14ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி ஐபிஎல் 2026 சீசனில் தனது 2வது வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, சென்னையின் 2வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது. அதேவேளையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் தங்களது கணக்கைத் தொடங்கத் தவறியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுக்கு பிசிசிஐ கடுமையான அபராதம் விதித்தது.

ALSO READ: கேகேஆரின் விக்கெட்டுகளை கீறிவிட்ட நூர்.. சென்னை அபார வெற்றி!

ரஹானேவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ:

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, ​ஸ்லோ ஓவர் ரேட் வீசியதாக கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே கண்டறியப்பட்டார். இதற்காக, ரஹானேவுக்கு பிசிசிஐ ரூ. 12 லட்சம் அபராதமும் விதித்தது.

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 22வது போட்டியின்போது, ​​கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட்டை பராமரித்ததால், அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ஐபிஎல் ஊடக வெளியீடு ஒன்று தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஓவர் வீத மீறல்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் கீழ், இந்த சீசனில் அவரது அணி செய்த முதல் மீறல் இதுவாகும். அதன்படி,ரஹானேவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஐபிஎல் 2026 சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் மீறிய 4வது வீரர் ரஹானே ஆவார். குஜராத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட முதல் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆவார், மேலும் இதே தவறை மீண்டும் செய்ததற்காக கூடுதலாக ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இதே காரணத்திற்காக சுப்மன் கில் மற்றும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தொடர் வெற்றி முகத்தில் சிஎஸ்கே.. புள்ளி அட்டவணையில் முன்னேற்றம்!

ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கேகேஆர்:

ஐபிஎல் 2026 தொடரில் கேகேஆர் தனது முதல் வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது. ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 4ல் தோல்வியடைந்துள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக, ஒரு புள்ளியுடன் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 10வது மற்றும் கடைசி இடத்தில் உள்ளது.

Follow Us