AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடும் தோனி..? வெளியேறும் சர்பராஸ் கான்!

MS Dhoni: பயிற்சியில் சென்னை பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பந்து வீசியபோது, ​​அதை எம்.எஸ். தோனி மிட்விக்கெட் பவுண்டரியை நோக்கித் தட்டிவிட்டார். சிஎஸ்கே-வின் பயிற்சி அமர்வு இரவு 9 மணிக்கு முடிவடைந்தது. இருப்பினும், தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யவில்லை.

IPL 2026: கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடும் தோனி..? வெளியேறும் சர்பராஸ் கான்!
எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Apr 2026 16:41 PM IST

கடந்த 2026 மார்ச் 28ம் தேதி ஐபிஎல் (IPL 2026) தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தங்களது ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியை வெளியிட்டது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் தோனி முதல் 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று தெரிவித்தது. காயம் காரணமாக, தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும், அவர் மற்ற வீரர்களுடன் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது. இது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ALSO READ: இரண்டாவது வெற்றியின்மூலம் SRH முன்னிலை.. தத்தளிக்கும் KKR.. முதலிடத்தில் யார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிரான சொந்த மண்ணில் அதாவது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும் போட்டிக்கு முன்னதாக, நேற்று அதாவது 2026 ஏப்ரல் 13ம் தேதி சேப்பாக்கில் மின்விளக்குகளின் கீழ் நடைபெற்ற சிஎஸ்கே-வின் பயிற்சி அமர்வின் இறுதிக்கட்டத்தில் தோனி வலைப்பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபட்டார். அப்போது, அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி உள்ளிட்ட துணை ஊழியர்கள் வீசிய த்ரோடவுன்களை எதிர்கொண்டு தோனி பயிற்சி மேற்கொண்டார். இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கினால், சர்பராஸ் கான் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

பவுண்டரியை விரட்டிய தோனி:

பயிற்சியில் ஹஸ்ஸி பந்து வீசியபோது, ​​அதை தோனி மிட்விக்கெட் பவுண்டரியை நோக்கித் தட்டிவிட்டார். சிஎஸ்கே-வின் பயிற்சி அமர்வு இரவு 9 மணிக்கு முடிவடைந்தது. இருப்பினும், தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யவில்லை. அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியில் விளையாடலாம் என்று நம்பப்படுகிறது. இதன் பொருள், தோனி இன்று களமிறங்கலாம். ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாவிட்டாலும், தோனி தொடர்ந்து அணியுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், தோனியின் இருப்பும் ஆலோசனைகளும் மதிப்புமிக்கவை என்றும், அவர் வீரர்களுக்குத் தீவிரமாக வழிகாட்டுவதோடு, அணியின் வியூகங்களுக்கும் பங்களித்து வருகிறார் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ: சென்னை – கொல்கத்தா இன்று மோதல்.. யார் வெற்றி பெறுவார்கள்? கணிப்புகள் இங்கே!

குறைந்த பந்துகளே விளையாடும் தோனி:

கடந்த சில சீசன்களில், தோனி 10-12 பந்துகளை எதிர்கொண்டு முடிந்தவரை அதிக ரன்கள் எடுக்கும் நோக்கில், ஆட்டத்தின் இறுதியில் பேட்டிங் செய்து வந்தார். 2023-ல் அவரது ஸ்டிரைக் ரேட் 182 ஆகவும், 2024-ல் 221 ஆகவும் இருந்தது. ஆனால் கடந்த 2025ம்  ஆண்டு, தோனி 145 பந்துகளை எதிர்கொண்டார். இது 2023 (57) மற்றும் 2024 (73) ஆண்டுகளில் அவர் எதிர்கொண்ட மொத்த பந்துகளின் எண்ணிக்கையை விட அதிகம். இதன் விளைவாக, அவரது ஸ்டிரைக் ரேட் 135 ஆகக் குறைந்தது.

Follow Us