IPL 2026: எம்.எஸ்.தோனி களமிறங்குவது எப்போது..? ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!
MS Dhoni: எம்.எஸ்.தோனியின் உடல்நலம் திட்டமிட்டபடி குணமடைந்தால், வருகின்ற 2026 ஏப்ரல் 18ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் அவர் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட எம்.எஸ்.தோனி விளையாடவில்லை.
எம்.எஸ். தோனி (MS Dhoni) முழு உடற்தகுதியை நெருங்கி வருவதாகவும், 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மீண்டும் களமிறங்கத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், மகேந்திர சிங் தோனி நாளை அதாவது 2026 ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மோதவிருக்கும் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தோனி எப்போது திரும்புவார் என்பதற்கான தேதியையோ அல்லது போட்டியையோ பயிற்சியாளர் குறிப்பிடாததால், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நட்சத்திரத்தைக் காண்பதற்கான காத்திருப்பு மேலும் சில நாட்கள் நீடித்து வருகிறது. எம்.எஸ். தோனி இல்லாத நிலையில், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ரெவ்ஸ்போர்ட்ஸ் அறிக்கையின்படி, ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பு ஏற்பட்ட கால் தசைப்பிடிப்பிலிருந்து தோனி குணமடைந்து வருவதால், அவர் முழு உடற்தகுதியை பெறும் தருவாயில் உள்ளார். இருப்பினும், தோனி மீண்டும் களத்திற்குத் திரும்புவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டியில் பங்கேற்க மாட்டார்.
ALSO READ: தோனியை தொடர்ந்து கோலி.. விரட்டும் காயம்.. களை இழக்குதா ஐபிஎல்?




எம்.எஸ்.தோனி திரும்புவது எப்போது..?
கிடைத்த தகவலின்படி, எம்.எஸ்.தோனியின் உடல்நலம் திட்டமிட்டபடி குணமடைந்தால், வருகின்ற 2026 ஏப்ரல் 18ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் அவர் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட எம்.எஸ்.தோனி விளையாடவில்லை. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு இதுவரை ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது. தோனி இல்லாத நிலையில், ஐபிஎல் 2026 தொடரின் முதல் 4 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனை மோசமாகத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, 2 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
ALSO READ: சிஎஸ்கே அட்டவணையில் திடீர் மாற்றம்.. சேப்பாக்கத்தில் இருந்து அகமதாபாத்திற்கு மாறும் போட்டி!
சென்னை அணியின் முழு விவரம்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், மாட் ஹென்றி, கலீல் அகமது, ஜேமி ஓவர்டன், ராகுல் சாஹர், மேத்யூ ஷார்ட், கோஷ், ஜி. ஷ்ரேயாஸ் கோபால், ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி, உர்வில் படேல், அமன் கான், டெவால்ட் பிரேவிஸ், ஜாக்கரி ஃபௌல்க்ஸ்.