AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ரோஹித்துக்கு குணமடையாத காயம்.. மும்பை அணியின் தொடக்க வீரர் யார்..?

Rohit Sharma Injury Update: மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நாளை அதாவது 2026 ஏப்ரல் 16ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முந்தைய போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ரோஹித் சர்மா, அடுத்த போட்டியில் பங்கேற்காமல் போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

IPL 2026: ரோஹித்துக்கு குணமடையாத காயம்.. மும்பை அணியின் தொடக்க வீரர் யார்..?
ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Apr 2026 15:28 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கினாலும், அடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்குச் சரிந்துள்ளது. தாங்கள் ஆடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றுமொரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா (Rohit Sharma), மும்பையின் அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஹர்திக் தலைமையிலான அணி, அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நடப்புத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ரோஹித் சர்மாவின் காயம்.. சோகத்தில் மும்பை இந்தியன்ஸ்.. மீண்டு வருவாரா?

மும்பை அணியின் அடுத்த போட்டி எப்போது..?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நாளை அதாவது 2026 ஏப்ரல் 16ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முந்தைய போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ரோஹித் சர்மா, அடுத்த போட்டியில் பங்கேற்காமல் போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 19-வது போட்டியில் விளையாடியபோது ரோஹித்துக்கு தொடை பின்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவரது காயத்தின் தீவிரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் ஷர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் தொடைத்தசைப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். முன்னதாக, ரோஹித் சர்மா தொடைத்தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து, குணமடைய அவருக்குக் காலம் பிடித்தது. வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பயிற்சியில் ரோஹித் கலந்துகொள்ளவே இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது பிரச்சனை மிகவும் தீவிரமானதாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கவலை கொள்கின்றனர். அப்படியிருந்தால், அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் இருந்து விலக்கப்படலாம்.

ALSO READ: சிஎஸ்கே போட்டியில் விதி மீறல்.. ரஹானே மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை!

ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக யார் வருவார்?

38 வயதான ரோஹித் ஷர்மா, ஐபிஎல் 2026-ன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 78 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். பின்னர், டெல்லி அணிக்கு எதிராக 4 ரன்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, 4வது போட்டியில் 19 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் விளையாடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக யார் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார்? என்ற கேள்வி எழுகிறது. அதன்படி, கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், பயிற்சியாளர் மஹேலே ஜெயவர்த்தனே ஆகியோர் எந்த வீரரைத் தொடக்க ஆட்டக்காரராக அனுப்புவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us