Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யாருடன் கூட்டணி?.. ராகுல் காந்தியை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. இன்று இறுதி முடிவு?..

Congress alliance with DMK or TVK: அதுமட்டுமில்லாமல், விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் சிக்கலுக்கு அக்கட்சி நிர்வாகிகள் பலர் முக்கியத்துவம் கொடுத்து, ஆதரவு கொடுத்து வந்தனர். குறிப்பாக, ராகுல் காந்தியே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் கூட்டணி குறித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

யாருடன் கூட்டணி?.. ராகுல் காந்தியை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. இன்று இறுதி முடிவு?..
ராகுலை சந்திக்கும் தமிழக காங்., நிர்வாகிகள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jan 2026 06:49 AM IST

சென்னை, ஜனவரி 17: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது திமுக தலைமையிலான கூட்டணியின் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகிறது.  தொடர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலிலும் அவர்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி வருகிறார். ஆனால், அக்கட்சி நிர்வாகிகள் செயல்பாடு இதற்கு மாற்றாக உள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

இதையும் படிங்க : சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு… விஜய்யின் வாழ்த்து தேர்தலுக்காக இருக்கலாம் – தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

ஆட்சியில் அதிகார பங்கு கோரிக்கை:

அதாவது, நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியதில் இருந்து, காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சியில் அதிகார பங்கு, அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. அதோடு, ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் தொழில்நுட்ப மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அவ்வப்போது விஜய்யை சந்தித்து வருவது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி:

அதுமட்டுமில்லாமல், விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் சிக்கலுக்கு அக்கட்சி நிர்வாகிகள் பலர் முக்கியத்துவம் கொடுத்து, ஆதரவு கொடுத்து வந்தனர். குறிப்பாக, ராகுல் காந்தியே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் கூட்டணி குறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

டெல்லியில் நடக்கும் முக்கிய கூட்டம்:

இந்த நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்த கூட்டம் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுகவுடன் தொடரும் கூட்டணியா, அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் புதிய கூட்டணியா? என்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி இந்திரா பவனில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்த கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,  காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தவெகவின் அடுத்தக் கட்ட பாய்ச்சல்…10 பேர் கொண்ட குழுவை இறக்கிய விஜய்!

திமுகவா? அல்லது தவெகவா?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் திமுகவுடன் தொடருமா? அல்லது நடிகர் விஜய்யின் ரசிகர் ஆதரவைக் கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்கில் தவெகவுடன் கூட்டணி அமைக்குமா? என்பது இன்று மாலைக்குள் தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.