Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’வாக்கு திருட்டு நடந்தது 100% உண்மை.. ஆதாரம் இருக்கு’ மீண்டும் உறுதியாக சொன்ன ராகுல் காந்தி

Rahul Gandhi On Election Commission : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து மீண்டும் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, வாக்கு திருட்டு விவகாரத்தில் 100 சதவீதம் எங்களிடம் ஆதாரம் உள்ளதாக அவர் கூறினார். மேலும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அவர் விமர்சித்தார்.

’வாக்கு திருட்டு நடந்தது 100% உண்மை.. ஆதாரம் இருக்கு’ மீண்டும் உறுதியாக சொன்ன ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 18 Sep 2025 13:24 PM IST

டெல்லி, செப்டம்பர் 18 : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக 2025 செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து குற்றச்சாட்டினார். பீகார் மாநிலத்தில் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி அடுத்தடுத்து பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். வாக்கு நீக்கத்திற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  “இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாத்து வருகிறார். வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதற்கு 100 சதவீதம் ஆதாரம் உள்ளது. இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் மக்களைப் பாதுகாப்பதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும்.

நாங்கள் உங்களுக்கு 100 சதவீத ஆதாரத்தை இங்கே வழங்கியுள்ளோம். இந்தத் தொலைபேசிகளின் தரவு, இந்த OTP-களை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். மகாராஷ்டிராவின் ராஜூராவில், 6815 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஆலந்தில், நாங்கள் மோசடிகளைப் கண்டுபிடித்தோம். கர்நாடகாவில்  6000 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உ.பி. ஆகிய மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்துள்ளது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

Also Read : ராகுல் காந்தி குற்றச்சாட்டு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்..

ராகுல் காந்தி குற்றச்சாட்டு


தேர்தலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான வாக்காளர்களை, பல்வேறு சமூகங்களை, முக்கியமாக எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் சமூகங்களை, ஒரு குழுவினர் திட்டமிட்டு குறிவைத்து நீக்கி வருகின்றனர். கடந்த 10-15 ஆண்டுகளாக இது நடந்து வருவது அதிர்ச்சியூட்டும் விஷயம். இந்திய மக்களால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.  வேறு யாராலும் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.

Also Read : ’இறந்தவர்களுடன் டீ குடித்தேன்’ – தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல்காந்தி

எனது வேலை ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பது அல்ல. அது இந்தியாவில் உள்ள அரசாங்கத்தின் வேலை. அவர்கள் அதைச் செய்யவில்லை, எனவே நான் அதைச் செய்ய வேண்டும்” என்று கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையமும் பதில் கொடுத்துள்ளது. அதாவது, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளது. எந்தவொரு வாக்காளர்களையும் ஆன்லைனில் நீக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது.