Rahul Gandhi: அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு! ராகுல் காந்திக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன்..!
Amit Shah Defamation Case: ஜார்க்கண்டில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம், 2018-ம் ஆண்டு நடந்த பேரணியில் அமித் ஷாவை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் காந்தி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

ஜார்க்கண்ட், ஆகஸ்ட் 7: கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஒரு பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (Amit Shah) அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் வழக்கில், காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு ஜார்க்கண்டில் சாய்பாசாவில் உள்ள எம்பி – எம்.எல்.ஏ நீதிமன்றம் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் ஆஜராவதற்கு முன்பாக ராகுல் காந்தி (Rahul Gandhi), முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்துள்ளது. இந்த இறுதிச் சடங்கானது ராம்கர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான நெம்ராவில் நடைபெற்றது.
ராகுல் காந்தி வழக்கு விவரம்:
கடந்த 2018ம் ஆண்டு சாய்பாசாவில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி, அமித் ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, பிரதாப் குமார் என்ற நபர் சாய்பாசா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது வழக்கு தொடர்ந்த பிரதாப் குமார், அமித் ஷாவின் பிம்பத்தை சேதப்படுத்தும் நோக்கத்துடன் ராகுல் காந்தி வேண்டுமென்றே இப்படி பேசியதாக குற்றம் சாட்டினார்.




ALSO READ: உத்தரகண்ட் வெள்ளத்தில் மிஸ்ஸான 28 மலையாளிகள்.. நிலைமை என்ன..?
ராகுல் காந்தி ஆஜர்:
BREAKING | A Special MP/MLA court in #Jharkhand GRANTS BAIL to #RahulGandhi in connection with a defamation case pertaining to his alleged remarks on Union Home Minister #AmitShah. pic.twitter.com/YQATXUGIJW
— Live Law (@LiveLawIndia) August 6, 2025
முன்னதாக, கடந்த 2025 ஜூன் 2ம் தேதி ராகுல் காந்தி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, 2025 ஜூன் 26ம் தேதி ஆஜராக வேண்டும் என்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். காங்கிரஸ் எம்பியின் வழக்கறிஞர் 2025 ஜூன் 10ம் தேதி தனது கட்சிக்காரர் திட்டமிடப்பட்ட நாளில் ஆஜராக முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். இதற்கு பதிலாக 2026 ஆகஸ்ட் 6ம் தேதி ஒதுக்குமாறு கோரினார். இதற்கு உயர் நீதிமன்றமும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
ALSO READ: கல்வான் தாக்குதலுக்கு பிறகு, முதன்முறையாக சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி
அதன்படி, ராகுல் காந்தி நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10.55 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, காங்கிரஸ் வழக்கறிஞர், ‘ ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் ஜாமீன் கோரியிருந்தார், அது வழங்கப்பட்டது. இப்போது நாங்கள் செயல்முறையை முன்னெடுப்போம்.’ என்று தெரிவித்தார்.