Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராகுல் காந்தி குற்றச்சாட்டு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்..

ECI Pressmeet: சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் பிகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து நாளை தேர்தல் ஆணையம் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Aug 2025 19:52 PM

டெல்லி, ஆகஸ்ட் 17, 2025: இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 17 2025 தேதி ஆன நாளை தேசிய தலைநகரில் செய்தியாளர் சந்திப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 17 2025 பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் இருக்கக்கூடிய ரைசின சாலையில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு அரசியலமைப்பு அமைப்பால் நடத்தப்படும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இதுவாகும். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அங்கீகரிக்க பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராமான்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர் அதிகார யாத்திரைக்கு ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை:

சிறப்பு வாக்காளர் திருத்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். மேலும் இந்த யாத்திரையில் மக்களை சேருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறப்பு வாக்காளர் திருத்தம் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலின் போது எதிர் கட்சி தலைவர்கள் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டுகளை எழுப்பியதிலிருந்து நடத்தப்படும் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பாகும்.

மேலும் படிக்க: தாயகம் திரும்பும் சுபான்ஷு சுக்லா.. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்..

2025 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெரிய அளவில் வாக்காளர் மோசடியில் தேர்தல் ஆணையம் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வாக்கு திருட்டுக்கான ஆதாரம் காங்கிரஸிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். பீகார் சிறப்பு தீவிர திருத்தம் பயிற்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாக்காளர் மோசடிக்கு பின்னால் உள்ள நோக்கம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பயன்படுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: வரி குறைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட டாப் அறிவிப்புகள்!

ஆதாரம் இருப்பதாக ராகுல் காந்தி திட்டவட்டம்:

இது தொடர்பாக பேசி அவர், “ வாக்குகள் திருடப்படுகின்றன. தேர்தல் ஆணையம் இந்த வாக்குத்திருட்டில் ஈடுபட்டுள்ளதற்கான அனைத்து ஆதாரமும் எங்களிடம் உள்ளது. 100 சதவீதம் ஆதாரத்துடன் பேசுகிறேன். நாங்கள் அதை வெளியிடும்போது தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டை செயல்படுத்துகிறது என்பதை முழு நாடும் அறிந்து கொள்ளும். அவர்கள் அதை யாருக்கு செய்கிறார்கள்? அவர்கள் அதை பாஜகவுக்கு செய்கிறார்கள்” என தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறது.