’இறந்தவர்களுடன் டீ குடித்தேன்’ – தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல்காந்தி
Rahul Gandhi On ECI: தேர்தல் ஆணையம் தரப்பில் சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் மூலம் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் என நீக்கப்பட்ட நபர்களுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேநீர் அருந்தியதாக தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி, ஆகஸ்ட் 13, 2025: பிகாரில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடே மிகவும் எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் என்று கூட இதனை சொல்லலாம். இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது நாடு அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள், இரு இடங்களில் பதிவு செய்திருப்பவர்கள் என பலரையும் கண்டறிந்து அதிலிருந்து இந்த 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த ராகுல் காந்தி:
ஆனால் இந்த பிரச்சனையை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்து பரபரப்பு புகாரை தெரிவித்து இருந்தார். பெங்களூருவில் இருக்கக்கூடிய மத்திய மக்களவைத் தொகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் திருடப்பட்டதாகவும் இந்த தொகுதியில் இருக்கக்கூடிய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் முகவரி போலியானவை என்றும் ஆதாரத்துடன் தெரிவித்து இருந்தார்.
Also Read: இனி இரவில் ரயிலில் நிம்மதியாக பயணிக்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு
இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசு பொருளாக மாறியது. அதேபோல் உச்ச நீதிமன்றம் தரப்பிலும் தேர்தல் ஆணையத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முறைகேடு நடந்திருந்தால் உச்ச நீதிமன்றம் அதை பார்த்து சும்மா இருக்காது என தெரிவித்திருந்தது.
இறந்தவர்களுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி:
जीवन में बहुत दिलचस्प अनुभव हुए हैं,
लेकिन कभी ‘मृत लोगों’ के साथ चाय पीने का मौका नहीं मिला था।इस अनोखे अनुभव के लिए, धन्यवाद चुनाव आयोग! pic.twitter.com/Rh9izqIFsD
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2025
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து தேநீர் அருந்தியுள்ளார். இது தொடர்பாக அவரது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நான் கண்டுள்ளேன். ஆனால் இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை இந்த தனித்துவமான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். இந்த சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை உடனடியாக தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது