Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெகவுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்? தொண்டர்களிடம் நடக்கும் ரகசிய சர்வே!

அந்தவகையில், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களில் பெரும்பாலானோர் மற்றுல் சில நிர்வாகிகள் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, சட்டமன்ற தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தவெகவுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்? தொண்டர்களிடம் நடக்கும் ரகசிய சர்வே!
ராகுல் காந்தி, விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Nov 2025 13:24 PM IST

சென்னை, நவம்பர் 14: 2026 சட்டசபை தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தொண்டர்களிடம் நடத்திய ரகசிய சர்வேயில், பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதோடு, தொகுதி பங்கீட்டை பொறுத்து திமுக கூட்டணியை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. எனினும், இரு கட்சி நிர்வாகிகளுக்கும் அண்மைக்காலமாக சுமூகமான போக்கு இல்லாத சூழல் நிலவுகிறது. தலைநகர் சென்னையில் ஆரம்பித்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிப்பதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் திமுக முக்கிய தலைவர்களுக்கும் இடையே வெளிப்படையாகவே வார்த்தை போர் நிலவும் சூழல் தான் தற்போது உள்ளது. இதனால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும்படி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: கரூர் வழக்கு… மின் தடை ஏற்படுத்தப்பட்டதா? மின்வாரிய ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை

தமிழகத்தில் தற்போது உள்ள சூழல் குறித்து மேலிட தலைவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, திமுக தங்களுக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதையும் அவர்கள் விளக்கியுள்ளனர். இந்தநிலையில், தான் விஜய் வருகை காங்கிரஸூக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. ஏற்கெனவே, ராகுல் காந்திக்கும், விஜயக்கும் இடையே நெருங்கிய நட்பு பேனப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு, விஜய் அரசியல் வருகையை அறிந்த ராகுல் தனிப்பட்ட முறையில் விஜய்யை தொடர்பு கொண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி விஜய்யை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆட்சியில் அதிகாரம் என விஜய் அறிவிப்பு:

அதோடு, விஜய்யும் தன்னுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் வழங்குவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இது மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. திமுகவுடன் எத்தனை ஆண்டுகள் பயணித்தாலும் ஆட்சியில் அதிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது.

ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், அக்கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியிலும் அதிகாரம் கிடைக்கும் என்ற கணக்கில் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர். இவ்விவகாரத்தில், முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் என பெரும்பாலான தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு என்பது எங்கள் உரிமை’ என வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

12 பேர் கொண்ட குழு:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலம் எவ்வளவு அதிகரித்துள்ளது, தேர்தலை சந்திக்க எவ்வாறு தயாராகி வருகிறார்கள். யாருடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அடங்கிய 12 பேர் கொண்ட குழு இன்னும் 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது

மேலும் படிக்க : இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு.. கோவை வரும் பிரதமர் மோடி.. எத்தனை நாள் பயணம்? நோக்கம் என்ன?

இந்த சூழ்நிலையில், கடந்த 11-ந்தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு SIR எதிராக தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தை கன்னியாகுமரியை சேர்ந்த காங்கிராஸ் நிர்வாகிகள் புறக்கணித்தனர். அதோடு, காங்கிரஸ் சார்பில் வரும் நவ.17ஆம் தேதி SIRக்கு எதிராக ஆர்ப்பட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சட்டசபை தேர்தலில் தவெக உடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தொண்டர்களிடம் நடத்திய ரகசிய சர்வேயில் தொகுதி பங்கீட்டில் திமுக தற்போதும் சொதப்பினால் விஜய்யுடன் களமிறங்கலாம்’ என கருத்து தெரிவித்துள்ளனர்.