Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் வழக்கு… மின் தடை ஏற்படுத்தப்பட்டதா? மின்வாரிய ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை

Karur Stampede Case : கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் 30, 2025 அன்று முதல் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மின் தடை ஏற்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதுகுறித்து பார்க்கலாம்.

கரூர் வழக்கு…  மின் தடை ஏற்படுத்தப்பட்டதா? மின்வாரிய ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Nov 2025 21:57 PM IST

கரூர், நவம்பர் 13: கரூர் வேலுச்சாமிப்புரத்தில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சிபிஐ (CBI) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் பரப்புரையின் போது மின்தடை ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தமிழக மின்உற்பத்தி மற்றும் மின்விநியோக கழக அதிகாரிகள் நவம்பர் 12, 2025 அன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் சம்பவம் குறித்து அவர்கள் தங்கள் விளக்கத்தை அளித்தனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை

இந்த வழக்கை சிபிஐ பொறுப்பேற்று, அக்டோபர் 30, 2025 முதல் கரூர் சுற்றுலா இல்லத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 31, 2025 முதல் நவம்பர் 1, 2025 வரை கரூர் வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வீடுகளில் விசாரணை மேற்கொண்டது. மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தில், 3டி லேசர் ஸ்கேனர் பயன்படுத்தி சாலையின் பரிமாணங்களை துல்லியமாக அளந்து பதிவு செய்தனர்.

இதையும் படிக்க : டிச.16 முதல் காலவரையற்ற போராட்டம்; டாஸ்மாக் ஊழியர்கள் அறிவிப்பு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக பனையூருக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தவெக உறுப்பினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் விஜய் பயணித்த வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கேட்டு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த நம்பர் 9, 2025 அன்று சிசிடிவி காட்சிகள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை தவெகவினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த விசாரணை தொடர்பாக ஒவ்வொரு மாதமும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஐ அதிகாரிகளின் விசாரணையை கண்காணிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தீர்ப்பளித்தது.

இதையும் படிக்க : இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு.. கோவை வரும் பிரதமர் மோடி.. எத்தனை நாள் பயணம்? நோக்கம் என்ன?

மின்சாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை

இதன் ஒரு பகுதியாக தமிழக மின்உற்பத்தி மற்றும் மின்விநியோக கழக அதிகாரிகளிடம் சிபிஐ நவம்பர் 13, 2025 அன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரூர் மேற்கு நகர உதவி செயற்பொறியாளர் கண்ணன், பொறியாளர் பி.ஓ.கண்ணப்பன் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிம் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது மின் தடை ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.