AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

70 நாள்கள் நீடித்த மர்மம்! ஹைகோர்ட்டில் நேற்று பொதுநல மனு.. இன்று வி.எஸ். பாபுவின் மரண அறிவிப்பு.. என்ன நடந்தது!

Kolathur Mla V.S. Babu : கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு உடல் நலம் குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மறுநாள் அவர் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது .

70 நாள்கள் நீடித்த மர்மம்! ஹைகோர்ட்டில் நேற்று பொதுநல மனு.. இன்று வி.எஸ். பாபுவின் மரண அறிவிப்பு.. என்ன நடந்தது!
வி.எஸ்.பாபு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 19 Nov 2026 17:44 PM IST

சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக எம்எல்ஏவான வி. எஸ். பாபு கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கொண்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது முதல் தற்போது வரை வி. எஸ். பாபுவின் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையோ அல்லது தகவலோ வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட உத்தரவிடக் கோரி, அந்தத் தொகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ( நவம்பர் 18- ஆம் தேதி) மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

70 நாள்களாக உடல் நலம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

கடந்த 70 நாட்களாக வி.எஸ். பாபு உடல் நலம் குறித்த விதவிதமான அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மறுநாளே அவர் மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக, வி. எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அவரது உடல்நலம் சீராக இருப்பதாக அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23- ஆம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாபுவை பார்த்திருந்தார்.

மேலும் படிக்க: ஸ்டாலின் வெற்றியை பறித்தவர்! புரசை பாபு முதல் கொளத்தூர் எம்எல்ஏ பதவி வரை.. வி.எஸ்.பாபு கடந்து வந்த பாதை!

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதென்ன

ஆனால், அதன் பின்னர் கடந்த 60 நாட்களாக வி. எஸ். பாபு உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகமோ, தமிழக அரசோ, தவெக தலைமையோ எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால், கொளத்தூர் எம்எல்ஏவின் உடல்நிலை எப்படி உள்ளது என்ற கேள்வி தொகுதி மக்கள் மத்தியில் எழுந்தது. இதனிடையே, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் மறுத்ததுடன், எம்எல்ஏ உடல்நலம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு- இன்று மரண அறிவிப்பு

அவர் கூறியும் வெகு நாட்கள் கடந்த நிலையில், கொளத்தூர் தொகுதி பணிகள் முடங்கி இருப்பதாக கூறி அந்தத் தொகுதியை சேர்ந்த தேவராஜன் சுகாதாரத்துறை செயலாளர், சென்னை ஆட்சியர், டிஜிபி ஆகியோருக்கு மனு அளித்திருந்தார். இதில், பதில் இல்லாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், மக்கள் பிரதிநிதி பாபுவின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு விசாரணை விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வி. எஸ். பாபு மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொகுதி மக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க: காலி தொகுதிகள் 6- ஆக உயர்வு! கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? களமிறங்குகிறாரா ஸ்டாலின்!

Follow Us