Vastu Tips: சரஸ்வதி பூஜை நாளில் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!
சரஸ்வதி பூஜை நாளில் வீட்டில் நேர்மறை ஆற்றல், ஞானம், செல்வம் பெற வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது அவசியமான ஒன்றாகும். இதில் சரஸ்வதி தேவி சிலையை வடக்கு திசையில் வைப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் கிழக்கு நோக்கி விளக்கேற்றுவதும் வாழ்வில் வெற்றியை உறுதி செய்யும்.

இந்து மதத்தில் ஏராளமான வழிபாட்டு தெய்வங்கள் உள்ளது. வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறிப்பிட்ட கடவுளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் ஞானம் மற்றும் கல்வியின் அதிபதியாக அறியப்படும் சரஸ்வதி தேவிக்கு புரட்டாசி மாதத்தின் வளர்பிறை நவமி தினம் என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என அழைக்கப்படுகிறது. இந்த நாள் வளர்பிறை பஞ்சமி என வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமி என்பது அறிவு, கற்றல் மற்றும் செழிப்புக்கான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில், சரஸ்வதி தேவியை வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி தான் என்பது ஐதீகமாக உள்ளது. அந்த வகையில் சரஸ்வதி பூஜை நாளில் உங்கள் வீட்டிற்கு நேர்மறையை கொண்டு வரக்கூடிய வாஸ்து குறிப்புகள் பற்றி நாம் காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு திசை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே அங்கு தான் சரஸ்வதி தேவியின் சிலையை வைக்க வேண்டும். சிலை அல்லது படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சரஸ்வதி முத்திரை தாமரை மலரில் அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சரஸ்வதி நின்ற நிலையில் இருக்கும் சிலை அல்லது படத்தைத் தவிர்க்க வேண்டும். பூஜையைத் தொடங்குவதற்கு முன் அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியின் 7 அறிகுறிகள் – எப்படி கண்டுபிடிப்பது?
இந்த பண்டிகை மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையது. ஆகவே வீட்டை பிரகாசமாகவும், ஈர்க்கக்கூடிய வகையிலும் மாற்ற மஞ்சள் நிறம் சார்ந்த பூக்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். சரஸ்வதி தேவியுடன் தொடர்புடைய அன்னம், வீணை போன்றவற்றை கோலங்களாக வரையலாம். வீட்டின் நுழைவாயில் மற்றும் பிற கதவுகளை அழகான மணிகள் கொண்ட மாலைகளால் அலங்கரிக்கலாம்.
இதையும் படிங்க: வீட்டுல பிரச்னையா இருக்கா? – வாஸ்து குறைபாடு காரணமா இருக்கலாம்!
இது நேர்மறை ஆற்றல்களை கொண்டு வரும். சரஸ்வதி பூஜை வழிபாட்டின்போது சிலை அல்லது புகைப்படத்துக்கு பின்னால் மஞ்சள் நிற துணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நாளில் மஞ்சள் நிறம் அணிவது, மஞ்சள் நிறத்திலான இனிப்புகள் நைவேத்தியமாக படைப்பது ஆகியவை சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் வீட்டில் சரஸ்வதி தேவியின் சிலையை புதிதாக வாங்குகிறீர்கள் என்றால் அதனை தினமும் வைத்து வழிபடலாம். இது வாழ்க்கையில் வெற்றியைத் தரும்.
இந்நாளில் பூஜையின் போது மஞ்சள் கலந்த அரிசியை பயன்படுத்துவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வ வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். இந்நாளில் கிழக்கு திசையில் விளக்கேற்றுவது நேர்மறை ஆற்றலைப் பரப்பி, வீட்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது ஞானத்தையும் அறிவையும் வளர்க்க உதவுகிறது.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)