Navratri Day 6: நவராத்திரி 6ம் நாள்.. காத்யாயனி தேவியை இப்படி வழிபடுங்க!
2025 நவராத்திரியின் ஆறாம் நாளில், பார்வதி அன்னையின் வீர வடிவான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார். தைரியம், தடைகளை நீக்குதல், திருமண நல்லிணக்கம் அருளும் இத்தேவிக்கு, செப்டம்பர் 27 அன்று சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாள் புரட்டாசி சனிக்கிழமையாகவும், ஷஷ்டி திதியாகவும் அமைவது மேலும் சிறப்பாகும்.

2025 நவராத்திரியின் ஆறாவது நாளில், பக்தர்கள் பார்வதி மாதாவின் போர்வீர வடிவமான காத்யாயனி தேவியை வணங்குகிறார்கள். இது தைரியத்தையும், எதிர்மறையை வென்றதையும் குறிக்கிறது.இன்றைய நாளின் வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்பு தகவல்களை காணலாம். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி ஒன்பது நாள் திருவிழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் துர்கா தேவி ஒன்பது வடிவங்களில் வழிபாடு செய்யப்படுகிறார். நவதுர்கைகள் என்று அழைக்கப்படும் இந்த நவராத்திரி நாளில் 6 ஆம் நாளில், பக்தர்கள் காத்யாயனி தேவியை வழிபடுகிறார்கள், இது பார்வதி அன்னையின் மிகவும் கடுமையான ஆக்ரோஷமான தோற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகிஷாசுரனை தோற்கடிக்க அவள் இந்த வடிவத்தை எடுத்ததாக சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கத்தின் மீது அமர்ந்து காத்யாயனி தேவி நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார். வாள் மற்றும் தாமரை, அபய மற்றும் வரத முத்திரை ஆகியவை அவளின் நான்கு கைகளிலும் அமையப் பெற்றதன் மூலம் ஆசீர்வாதங்களை வழங்குவதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
Also Read: உங்க பர்ஸ் என்ன கலர்?.. பணம் செழிக்க இந்த நிறம் யூஸ் பண்ணுங்க!
காத்யாயனி அன்னை பக்தர்களுக்கு தைரியத்தை அருளுவதாகவும், தடைகளை நீக்குவதாகவும், திருமண உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. அவர் பிருஹஸ்பதி கிரகத்தை ஆட்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இன்று புரட்டாசி சனிக்கிழமை, ஷஷ்டி திதியுடன் இவள் வணங்கப்படுவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் ஷஷ்டி திதி பிற்பகல் 12:03 மணிக்கு தொடங்குகிறது, இந்த திதி செப்டம்பர் 28 ஆம் தேதியான நாளை பிற்பகல் 2:27 மணிக்கு முடியும்
இன்றைய நாளில் அதிகாலை பிரம்ம முகூர்த்த காலமான 4:36 மணி – 5:24 மணி வரை பூஜை மேற்கொள்ள முடியாதவர்கள், காலை 11:48 மணி தொடங்கி 12:36 மணி வரையும், விஜய முகூர்த்த காலமான பிற்பகல் 2:12 மணி தொடங்கி – 3:00 மணிக்குள்ளும் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நவராத்திரி விழாவின் 6ஆம் நாளில் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, பிரார்த்தனை செய்வதற்கு முன் வழிபாட்டு இடத்தை தயார் செய்ய வேண்டும்.
Also Read: சபரிமலைக்கு போறீங்களா? வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.. உடனே புக் பண்ணுங்க!
பாரம்பரிய சடங்குகளை பின்பற்றி தீபம் ஏற்றுதல், நைவேத்திய பொருட்கள், பூக்கள் மற்றும் குங்குமம் ஆகியவை படைக்க வேண்டும். காத்யாயனி தேவிக்கு பருவகால பழங்கள், தேன் மற்றும் எளிய இனிப்புகள் ஆகியவை நைவேத்தியமாக படைக்கலாம்.
மேலும் 6 ஆம் நாளுக்கான மங்களகரமான நிறம் சாம்பல் ஆகும். இது சமநிலை, அமைதி மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. காத்யாயனி தேவியை வழிபடும்போது இந்த நிறத்தை அணிவது மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. அப்போது ஓம் தேவி காத்யாயந்யை நமஹ என உச்சரித்தாலே எண்ணிய செயல்கள் யாவும் ஈடேறி நாம் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெறுவோம் என்பது ஐதீகமாகும்.