ஆஸ்திரேலியாவின் பிரபலமான பாண்டி பீச்சில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், பலரின் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் உதவியும் குவிந்துள்ளது. இந்த தாக்குதலின் போது, துப்பாக்கி சூடு நடத்தியவரை துணிச்சலுடன் எதிர்த்து துப்பாக்கியை பறித்த அகமது அல் அகமது என்பவருக்கு, நிதி திரட்டல் மூலம் 14 கோடி மதிப்புள்ள தொகை வழங்கப்பட்டுள்ளது.