Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சபரிமலைக்கு போறீங்களா? வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.. உடனே புக் பண்ணுங்க!

Sabarimala Special Train : சபரிமலை ஐயப்பன் கோயில் வெகு விமர்சையாக மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஹூப்பள்ளி - கொல்லம் இடையே இந்த ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலைக்கு போறீங்களா? வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.. உடனே புக் பண்ணுங்க!
சபரிமலைக்கு சிறப்பு ரயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Sep 2025 07:14 AM IST

சென்னை, செப்டம்பர் 25 : சபரிமலைய செல்லும் பக்தர்களுக்கான தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் வழியாக கேரளாவுக்கு இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக புகழ்பெற்றது சபரிமலை ஐயப்பன் கோயில். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆண்டுதோறும் நடக்கும மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூஜைக்கு சபரிமலைக்கு இந்தியா முழுவதும் பக்தர்கள் வருகை தருவார்கள். மண்டல பூஜை 202 நவம்பர் மாதத்தில் தொடங்கி 48 நாட்கள் நடக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்வார்கள்.

அதேபோல, மகரவிளக்கு பூஜை 2026 ஜனவரி மாதத்தில் நடைபறும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். இதனால், தற்போது முதலே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.  அதன்படி, ஹூப்பள்ளி – கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. இந்த ரயில் கர்நாடகாவில் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை ஞாயிற்றுக் கிழமையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read : பாதை தகராறு.. அண்ணியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கொழுந்தன்!

சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு


இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஹூப்பள்ளியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லத்திற்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளிக்கு சென்றடைவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த ரயில் 22 பெட்டிகளுக்கு இயக்கப்படும்.

Also Read : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்தில் மழை இருக்குமா?

இதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், இரண்டு ஏசி 3 அடுக்கு பெட்டிகள், 12 ஸ்லீப்பர், ஐந்து பொது பெட்டிகள் இருக்கும். இந்த ரயில், பிரூர், அர்சிகேர், தும்கூர், எஸ்எம்விடி பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, ஏர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனஞ்சேரி, திருவலா, செங்கனூர், மாவேலிக்கர், கயக்குளம், கருனாகப்பல்லி, சாஸ்தாகோட்டை, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு 2025 செப்டம்பர் 25ஆம் தேதியான இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.