Navratri: மக்களே ரெடியா இருங்க.. நவராத்திரி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னைக்கும் கோயம்பத்தூருக்கும் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளில் கோயம்பத்தூரில் இருந்தும், செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை – கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 24) காலை 8 மணி தொடங்குகிறது. இந்த ரயிலானது 06034 என்ற எண்ணுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து செப்டம்பர் 28, அக்டோபர் 5, அக்டோபர் 12 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. அதேசமயம் மறுமார்க்கமாக 06033 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, அக்டோபர் 13 ஆகிய திங்கட்கிழமை தோறும் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 3ஆம் வகுப்பு ஏசி, 3 ஆம் வகுப்பு ஏசி எகானமி, சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
Additional Special Trains Between
Coimbatore – Chennai
In view of the forthcoming Festive Season !Meeting the increasing travel requirements of Passengers
Advance Reservations for these Special Trains
Will Commence At
08.00 hrs on 24.09.2025.@GMSRailway @DrmChennai pic.twitter.com/SXs7jcOJJO— DRM Salem (@SalemDRM) September 23, 2025




இந்த ரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து இரவு 11:30 க்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும் எனவும், அதே சமயம் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10:15 மணிக்கு கிளம்பும் ரயிலானது மாலை 6.35 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குஷியில் தென் மாவட்ட பயணிகள். வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்..
களைகட்டும் நவராத்திரி விழா
நாடு முழுவதும் 2020 செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 2025 அக்டோபர் 1ம் தேதி வரை நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி விஜயதசமி, தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பொறுத்தவரை சரஸ்வதி பூஜை விடுமுறை இந்த முறை காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் வருவதால் சற்று பள்ளி கல்லூரி செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் சற்று வருத்தம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயில் ஏசி முதல் கோச்சில் பெட்ஷீட் திருடிய குடும்பம்.. கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரல்!
ஆனாலும் நவராத்திரி கொண்டாட்டம் என்பது நாடு முழுவதும் களைக் கட்டியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநில அரசின் சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே சமயம் இன்னும் 25 நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதால் சிறப்பு ரயில்கள் கால அட்டவணை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.