நீலகிரிக்கு டூர் செல்ல பிளானா? யானைகள் முகாம் 4 நாட்கள் மூடல்.. வெளியான அறிவிப்பு
Mudumalai Elephant Camp : நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாம் நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது. 2025 செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிக்ள் தடை விதித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீலகிரி, செப்டம்பர் 23 : நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாம் (Mudumalai Elephant Camp) நான்கு நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று முதல் 26ஆம் தேதி வரை யானைகள் முகாம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று நீலகிரி. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகும், குளிர்ச்சியான வானிலையையும் காண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நீலகிரிக்கு வெளி ம மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருகை தருகின்றனர். லேம்ஸ் பாறை, டால்பின் நோஸ், ஊட்டி, தொட்டபெட்டா, பைகாரா நீர்வீழ்ச்சி, யானைகள் முகாம்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் அதற்கேற்ப வசதிகளையும் செய்து வருகிறது. அதே நேரத்தில், சுற்றுலா இடங்கள் எப்போது திறக்கப்படும், மூடப்படும் என்ற விவரத்தை சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தான், முதுமலை யானைகள் முகாம் நான்கு நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் முதுமலை யானைகள் முகாமை பார்வையிடாமல் செல்வதில்லை. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமை பார்வையிட்டு வருகின்றனர்.
Also Read : உஷார்.. தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன உயிர்!




முதுமலை யானைகள் முகாம் 4 நாட்களுக்கு மூடல்
ஊட்டியில் இருந்து 70 கி.மீ தொலைவில் இந்த முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் யானைகள் மட்டுமின்றி, சிறுத்தை, கரடி, புள்ளிமான், புலிகள் போன்ற விலங்குகள் இருக்கின்றன. குறிப்பாக, முதுமலை யானகைள் முகாமை பார்வையிடவும், யானைச்சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் தான் வனத்துறை சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, 2025 செப்டம்பர் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை முதுமலை யானகைள் முகாம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வனச் சரக அலுவலர் மேகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோரின் உத்தரவுப்படி, 2025 செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டில் தென்மண்டல பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
Also Read : ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்.. காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 5 பேர் கைது!
இதனால், தெப்பாக்காடு யானைகள் முகாம் இயங்காது. சூழல் சுற்றுலா சவாரி, யானைகளுக்கு உணவு அளிக்கும் முகாம்களுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். இதனால், நீலகிரியில் முதுமலை பயணத்தை மேற்கொள்ள இருக்கும் சுற்றுலா பயணிகள், நான்கு நாட்கள் இங்கு வருவதை தவிர்த்து, மற்ற நாட்களில் வருகை புரிய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.