நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகளுக்கு விடுமுறை.. சுற்றுலா தலங்கள் மூடல்..
School Leave: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 5, 2025 தேதியான இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை, ஆகஸ்ட் 5, 2025: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 5, 2025 தேதி ஆன இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளை கன முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கன மழை பதிவாகி வருகிறது இன்று அதாவது ஆகஸ்ட் 5 2025 ஆம் தேதி ஆன இன்று நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை:
தென்மேற்கு பருவ மழை என்பது 2025 ஆம் ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. வழக்கமாக இந்த பருவ மழை என்பது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பார்சன் வேலி, அவலாஞ்சி, சின்கோனா, சின்னகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான மழை பதிவு இருந்து வருகிறது.
மேலும் படிக்க: இதுநடந்தால் விஜயுடன் கூட்டணி முடிவு.. பிரேமலதா விஜயகாந்த் பளீச் பதில்..!
கடந்த 24 மணி நேரத்தில், விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 6, செங்கம் (திருவண்ணாமலை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), செய்யார் (திருவண்ணாமலை) தலா 5, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 4 செ.மீ மழை பதிவானது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அதாவது ஆகஸ்ட் 5 2025 தேதியான இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை அதாவது அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் படிக்க: சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி – வைரலாகும் வீடியோ
சுற்றுலா தளங்கள் மூடல்:
மேலும் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலா தலங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மழை பேரிடர் பாதுகாப்புகள் குறித்த தகவல் தெரிவிக்க உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி, 0423-2450034, 24500335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 9488700588 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்பை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.