Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்.. வால்பாறைக்கு இனி E PASS கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Valparai E Pass : ஊட்டி, கொடைக்கானல் போன்று இனி வால்பாறைக்கு செல்வதற்கும் இ பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வரும் 2025 நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்..  வால்பாறைக்கு இனி E PASS  கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வால்பாறை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Sep 2025 20:27 PM IST

கோவை, செப்டம்பர் 19 : ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக, சுற்றுலா பயணிகள் அதிகம் படையெடுப்பது வால்பாறை. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வால்பாறையின் இயற்கை அழகும், குளிர்ச்சியான வானிலையையும் காண சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகின்றனர். வால்பாறையில் தேயிலை தோட்டங்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவை உள்ளன. ஆழியாறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி வியூ பாயிண்ட், அட்டகட்டி ஆர்கிட்டோரியம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள சுற்றி பார்த்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் விரும்பும் இடமாக வால்பாறை இருந்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, ஊட்டி, கொடைக்கானலை போல  இனி வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலைப் போல் வால்பாறையில் நவம்பர் 1 ம் தேதி முதல் இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

Also Read : மக்களே ரெடியா? சென்னையில் கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்

வால்பாறைக்கு இனி E PASS கட்டாயம்

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.

Also Read : தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?

இதனை விசாரித்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள். அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1 ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளனர். வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2025 அக்டோபர் 31 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.